இந்தியாவில் OnePlus 7T Pro, OnePlus 7 Pro மற்றும் OnePlus 7 பயனர்கள் OxygenOS 10.3.1-ஐப் பெறுகின்றனர்.
OnePlus 7-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜியோ நெட்வொர்க்கிற்கான VoWiFi ஆதரவைப் பெற்றுள்ளன
OnePlus 7T Pro, OnePlus 7 Pro மற்றும் OnePlus 7 ஆகியவை புதிய OxygenOS அப்டேட்டுகளைப் பெறத் தொடங்கியுள்ளன, அவை ஜனவரி 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டு வருகின்றன. சமீபத்திய அப்டேட்டுகள் OnePlus 7T Pro, OnePlus 7 Pro மற்றும் OnePlus 7 ஆகியவற்றுக்கு குறிப்பாக ஜியோ பயனர்களுக்கு VoWiFi அழைப்பு ஆதரவை சேர்க்கின்றன. ஒன்பிளஸ் புதிய OxygenOS அப்டேட் மூலம் ரேம் நிர்வாகத்தையும் மேம்படுத்தியுள்ளது. புதிய அப்டேட்டுகள் அரங்கேற்றப்பட்ட வெளியீடாக வெளியிடப்பட்டு, ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களை அடைகின்றன - அடுத்த சில நாட்களில் ரோல்அவுட் தொகுப்புடன் ஒரு பரந்த அலவில் வெளிவரும்.
இந்தியாவில், OnePlus 7T Pro, OnePlus 7 Pro மற்றும் OnePlus 7 ஆகியவை OxygenOS 10.3.1-ஐப் பெறுகின்றன. இருப்பினும், ஐரோப்பா மற்றும் உலகளாவிய சந்தைகளில் உள்ள பயனர்கள் OnePlus 7 Pro மற்றும் OnePlus 7 மாடல்களில் OxygenOS 10.0.4 மற்றும் OnePlus 7T Pro-வில் OxygenOS 10.0.7 ஆகியவற்றைப் பெறுகின்றனர்.
அதிகாரப்பூர்வ மன்றத்தில் வழங்கப்பட்ட சேஞ்ச்லாக் படி, OnePlus 7T Pro, OnePlus 7 Pro மற்றும் OnePlus 7-க்கான சமீபத்திய OxygenOS பதிப்புகள் ஒரே மாதிரியான மாற்றங்களை உள்ளடக்கியது. அப்டேட்டுகள் ஜனவரி ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகின்றன, மேலும் ரேம் நிர்வாகத்தை மேம்படுத்துகின்றன. குறிப்பாக இந்திய பயனர்களுக்கு, அப்டேடுகளில் ஜியோ நெட்வொர்க்கிற்கான VoWiFi ஆதரவு மற்றும் தொடர்புகள் மற்றும் குறிப்புகளுடன் ஒத்திசைவை செயல்படுத்த கிளவுட் சேவை ஆகியவை அடங்கும்.
மேம்படுத்தப்பட்ட செய்தி அறிவிப்பு, செயலித் தேர்வு மற்றும் இருப்பிடம், காலெண்டர் மற்றும் auto-track அம்சத்திற்கான கூடுதல் ஆதரவுடன் மேம்படுத்தப்பட்ட Work-Life Balance மோடும் உள்ளது. இந்திய பயனர்கள் கூடுதலாக கிரிக்கெட் ஸ்கோர்களை அட்டையாகப் பெறலாம்.
புதிய அப்டேட்டுகள் சில செயலிகளுடன் ஏற்பட்ட கருப்பு / வெற்று திரை சிக்கல்களை மேம்படுத்துகின்றன. தனியுரிமை விழிப்பூட்டல்களுக்கான நினைவூட்டல்களை ஆதரிக்கும் அம்சமும் உள்ளது. தவிர, அப்டேட்டுகள், கணினி நிலைத்தன்மையை மேம்படுத்துகின்றன மற்றும் பொதுவான பிழைகளை சரிசெய்கின்றன.
"OTA இன்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களால் பெறப்படும், மேலும் முக்கியமான பிழைகள் ஏதும் இல்லை என்பதை உறுதிசெய்த சில நாட்களில் பரந்த அளவில் வெளியேறும்" என்று OnePlus குழு மன்ற பதிவில் எழுதியது.
Settings menu-வைப் பார்வையிடுவதன் மூலம் உங்கள் ஒன்பிளஸ் சாதனத்தில் சமீபத்திய அப்டேட்டுகளின் கிடைக்கும் தன்மையை நீங்கள் சரிபார்க்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
WhatsApp Working on 'Strict Account Settings' Feature to Protect Users From Cyberattacks: Report
Samsung Galaxy XR Headset Will Reportedly Launch in Additional Markets in 2026
Moto G57 Power With 7,000mAh Battery Launched Alongside Moto G57: Price, Specifications