இன்று விற்பனையாகவுள்ள 'ஒன்ப்ளஸ் 7': விவரங்கள் தெரிஞ்சுக்கோங்க!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 4 ஜூன் 2019 09:16 IST
ஹைலைட்ஸ்
  • ஒன்ப்ளஸ் 7 இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது
  • ஸ்னேப்ட்ராகன் 855 ப்ராசஸர், 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 14 முதல் கடைகளில் கிடைக்கும்

வண்ணங்களில் வெளியாகியுள்ள ஒன்ப்ளஸ் 7

கடந்த மாதம் ஒன்ப்ளஸ் 7 Pro-வுடன் அறிமுகமான ஸ்மார்ட்போன் தான் இந்த ஒன்ப்ளஸ் 7. இந்த ஒன்ப்ளஸ் 7 Pro ஸ்மார்ட்போனின் விற்பனை, இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமான அந்த வாரமே துவங்கிய நிலையில், ஒன்ப்ளஸ் 7-ன் விற்பனை ஜூன் மாதம் 4-ஆம் தேதியான இன்று துவங்கவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் மற்றும் ஒன்ப்ளஸ் தளங்களில் மதியம் 12 மணிக்கு துவங்கவுள்ளது. எஸ் பி ஐ கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 2,000 ரூபாய் உடனடி தள்ளுபடி பெறப்போகும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஜியோ நிறுவனம் 9,300 ரூபாய் வரியயிலான் சலுகைகளை வழங்கியுள்ளது.

ஒன்ப்ளஸ் 7: விலை என்ன, எங்கு பெறலாம்?

6GB RAM + 128GB சேமிப்பு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என இரண்டு வகைகளில் மட்டுமே வெளியாகியுள்ளது இந்த ஒன்ப்ளஸ் 7 ஸ்மார்ட்போன். இதில் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட ஒன்ப்ளஸ் 7-ன் விலை ரூபாய் 32,999 . அதே நேரம் 8GB RAM + 256GB சேமிப்பு அளவுகொண்ட ஒன்ப்ளஸ் 7-ன் விலை ரூபாய் 37,999 என அறிவித்துள்ளது. 6GB RAM + 128GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் சாம்பல் (Mirror Grey) வண்ணத்திலும் 8GB RAM + 256GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் சாம்பல் (Mirror Grey) மற்றும் சிவப்பு ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியாகும் என அறிவித்துள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம்.

அமேசான் மற்றும் ஒன்ப்ளஸ்-ன் ஆன்லன் தளங்கள், இந்த ஸ்மார்ட்போன் இன்று( ஜூன் 4) மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரவுள்ளது.

தற்போதைக்கு, அமேசான் மற்றும் ஒன்ப்ளஸ் தளங்களில் மற்றுமே விற்பனையாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், வருகின்ற் ஜூன் 14-ஆம் தேதி முதல், ஒன்ப்ளஸின் ஒப்பந்த நிறுவனங்களான க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் விற்பனையாகவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை எஸ் பி ஐ கிரடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயனபடுத்தி பெற்றால் 2,000 ரூபாய் உடனடி தள்ளுபடி பெறலாம். மேலும், ஜியோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு 9,300 ரூபாய் வரையிலான சலுகைகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்ப்ளஸ் 7: சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம் வசதி, அண்ட்ராய்ட் 9.0 பை(Android 9.0 Pie) அமைப்பைக்கொண்ட இந்த ஸ்மார்போன் ஆக்சிஜன் ஓ எஸ்(OxygenOS) உடன் செயல்படும். 8GB வரையிலான RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டுள்ளது.

Advertisement

6.41-இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கும் இந்த ஒன்ப்ளஸ் 7-னில் 90Hz திரை புதுப்பிப்பு விகிதம்(refresh rate) ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் திரை பற்றி மேலும் கூறுகையில் 19.5:9 என்ற திரை விகிதத்தையும், 402ppi பிக்சல் டென்சிடியையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கொரில்லா கிளாஸ் 6 பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஜென் மோட், மற்றும் ஸ்கிரீன் ரெக்கார்டிங் வசதியும் உள்ளது.

இரண்டு பின்புற கேமராக்களை மட்டுமே கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 48 மேகாபிக்சல் மற்றும் 5 மேகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது இந்த இரண்டு கேமராக்கள். இந்த ஸ்மார்ட்போனில் 16 மேகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா இருக்கிறது. இந்த செல்பி கேமரா, முன்பகுதியில் ஒரு சிறய நாட்ச் கொடுக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒன்ப்ளஸ் 7-வில் 3700mAh பேட்டரி அளவு கொண்ட பேட்டரி, டைப்-C சார்ஜ் போர்ட், அதிவேக வார்ப் சார்ஜர் 20(5V/ 4A) கொண்டு வெளியாகும் என அறிவித்துள்ளது. 157.7x74.8x8.2mm போன்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 182 கிராம் எடை கொண்டுள்ளது.

Advertisement

இன்னும் பல வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 4G VoLTE மற்றும் வை-பை வசதி கொண்டும் மற்றும் ப்ளூடூத் v5.0 கொண்டுள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • All-day battery life
  • Loud stereo speakers
  • Bad
  • Below-average low-light camera performance
  • Inconsistent focus in portraits and macros
  • Poor low-light video stabilisation
 
KEY SPECS
Display 6.41-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3700mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus 7, OnePlus 7 price in India, OnePlus 7 specifications

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Huawei Watch GT 6 Pro, GT 6: 21 நாள் பேட்டரி, IP69 ரேட்டிங் – இந்தியா விலை & அம்சங்கள்!
  2. OnePlus 15R, Pad Go 2 இந்திய அறிமுகம்: தேதி, அம்சங்கள் விவரம்!
  3. Oppo A6x: 6500mAh பேட்டரி, Dimensity 6300 – முழு விவரம்!
  4. 200MP கேமரா, 8000mAh பேட்டரி! HONOR 500 Pro-வில் Snapdragon 8 Elite – வெறித்தனமான அம்சங்களுடன் அறிமுகம்
  5. OnePlus ரசிகர்களே! உங்க 15R-ஆ இதுதான்! Snapdragon 8 Gen 5 சிப்செட்டோட புதிய Ace 6T போன்
  6. மொபைல்ல இல்ல, காருக்குள்ள ரே-டிரேசிங்! Dimensity P1 Ultra சிப்செட் – காருக்கான AI சக்தியை கொண்டுவந்த MediaTek
  7. 200MP, 7000mAh பேட்டரி... இனி சார்ஜ் பண்ற கவலையே இல்லை! Realme 16 Pro-வோட மிரட்டலான ஸ்பெக்ஸ் லீக்
  8. Phone 3 யூசர்களுக்கு தீபாவளி ட்ரீட்! Nothing OS 4.0 ஸ்டேபிள் அப்டேட் ரிலீஸ்—கிட்டத்தட்ட 8 புது வசதிகள்
  9. 8000mAh பேட்டரி கொண்ட OnePlus போனா? Ace 6T மாடலின் அசத்தல் வண்ணங்கள் ரிலீஸுக்கு முன்னாடியே வெளியீடு
  10. Oppo K15 Turbo Pro: Snapdragon 8 Gen 5, 8000mAh பேட்டரி லீக்.
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.