அமேசான், இப்போது தனது இணையதளத்தில் Fab Phones Fest-ஐ பல போன்களில் ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடியை வழங்குகிறது. இ-காமர்ஸ் நிறுவனம் சிறந்த போன்களில் 40 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது. மேலும், no-cost EMI ஆப்ஷன்கள், எக்ஸ்சேஞ் தள்ளுபடி, இலவச திரை மாற்றீடு மற்றும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ. 750 தள்ளுபடி ஆகியவை பட்டியலிடப்படுள்ளது. இ-காமர்ஸ் நிறுவனம் இந்த விற்பனையை டிசம்பர் 23 வரை நடத்தும். மேலும், பிரபலமான போன்களான OnePlus 7T, Redmi K20 Pro மற்றும் OnePlus 7 Pro ஆகியவை தள்ளுபடியுடன் பட்டியலிடப்பட்டுள்ளன.
Fab Phones Fest-ன் ஒரு பகுதியாக, இந்தியாவில் OnePlus 7T-யின் 8GB RAM + 128GB ஸ்டோரேஜின் விலை ரூ. 34,999-யாக தள்ளுபடி செய்யப்படுள்ளது. இது ரூ. 3,000 மதிப்புள்ள தள்ளுபடியை காட்டுகிறது. அதேபோல், OnePlus 7T 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் அசல் விலையான ரூ. 39.999-யில் இருந்து, தள்ளுபடி விலையில் ரூ. 37,999-க்கு கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள், அமேசான் விற்பனையின் போது HDFC வங்கி கார்டைப் பயன்படுத்தி ரூ. 1,500 உடனடி தள்ளுபடியை பெறலாம். போன் வாங்குவோருக்கு no-cost EMI ஆப்ஷன்களையும் அமேசான் வழங்குகிறது. OnePlus 7T Pro விலைக் குறைப்பைக் காணவில்லை, ஆனால் 12 மாதங்கள் வரை no-cost EMI ஆப்ஷன்கள் மற்றும் HDFC கார்டுகள் மற்றும் EMI ஆகியவற்றில் ரூ. 3,000 உடனடி தள்ளுபடியுடன் பட்டியலிடப்பட்டுள்ளது.
Redmi Note 8 Pro திறந்த விற்பனை முறையில் கிடைக்கிறது. மேலும், முதல் முறையாக எக்ஸ்சேஞ் தள்ளுபடிக்கு ரூ. 7,400 வரை பட்டியலிடப்படுள்ளது. இதன் 6GB + 64GB வேரியண்ட் ரூ. 14,999-யாகவும், 6GB + 128GB வேரியண்ட் ரூ. 15,999-யாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. iPhone XR, தள்ளுபடி விலையுடன் ரூ. 45,000-க்கு பட்டியலிடப்படுள்ளது. மேலும், ஒன்பது மாதங்கள் no-cost EMI ஆப்ஷனுடன் வருகிறது.
Redmi K20 Pro-வும் ரூ. 3,000 தள்ளுபடியுடன் பட்டியலிடப்படுள்ளது. மேலும், அதன் 128GB ஆப்ஷன் ரூ. 24,999 மற்றும் 256GB ஆப்ஷன் ரூ. 27,999 ஆகும். எக்ஸ்சேன்ஞ்-க்கு கூடுதலாக ரூ. 2,000 மற்றும் ஆறு மாதங்கள் வரை no-cost EMI ஆப்ஷனை அமேசான் பட்டியலிட்டுள்ளது. அதேபோல், Redmi 7A-வும் ரூ. 1,000 தள்ளுபடியுடன் பட்டியலிடப்படுள்ளது. மேலும், அமேசான் விற்பனையின் போது வெறும் ரூ. 5,000-க்கு பட்டியலிடப்படுள்ளது.
OnePlus 7 Pro-வின் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் பெரிய தள்ளுபடி விலையில் ரூ. 42,999-க்கு கிடைக்கிறது. இந்த போன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ. 52,999-க்கு அறிமுகமானது. இப்போது, ரூ. 10,000 தள்ளுபடியைப் பெறுகிறது. OnePlus 7 Pro 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டிற்கும் தள்ளுபடி கிடைத்துள்ளது. இது, சமீபத்திய விற்பனையின் கீழ் ரூ. 39,999-க்கு கிடைக்கிறது. 12 மாதங்கள் வரை no-cost EMI ஆப்ஷன்கள் உள்ளன. மேலும், HDFC கார்டுகள் மற்றும் EMI-ல் ரூ. 2,000 உடனடி தள்ளுபடியும் வழங்கப்படும்.
Xiaomi Mi A3, Oppo F11, Samsung Galaxy M30 மற்றும் Redmi K20 போன்ற பிற போன்களும் விலை வீழ்ச்சியைக் காண்கின்றன. மொபைல் கேஸ்கள் மற்றும் கவர்களில் 80 சதவீதம் வரை தள்ளுபடி, ஹெட்செட்களில் 50 சதவீதம் வரை தள்ளுபடி, பவர் ஃபேங்கில் 70 சதவீதம் வரை தள்ளுபடி, மொபைல் பாகங்கள் மீது 60 சதவீதம் வரை தள்ளுபடி ஆகியவை அடங்கும். எல்லா ஒப்பந்தங்களையும் காண, அமேசான் இந்தியாவில் பிரத்யேக விற்பனை பக்கத்திற்குச் செல்லுங்கள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்