ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 10 உடன், OnePlus 7 Pro 5G பயனர்கள் சில புதிய வடிவமைப்பு கூறுகளைப் பெறுவார்கள்.
'ஸ்மார்ட் டிஸ்பிளே' ஆப்ஷன் ஆக்ஸிஜன்ஓஎஸ் 10-ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
முன்னதாக, ஒன்பிளஸ் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லா (Pete Lau), நிறுவனம், ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 10 அப்டேட்டை ஒன்பிளஸ் 7 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போன்களுக்கு 2020 முதல் காலாண்டில் வெளியிடும் என்று கூறியிருந்தார். இப்போது நிறுவனம் ஆக்ஸிஜன்ஓஎஸ் ஓஎஸ் 10.0.4 அப்டேட்டை வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்த அப்டேட் வழக்கமான UI மற்றும் தனியுரிமைக்கான மேம்பட்ட இருப்பிட அனுமதிகளுடன் ஆண்ட்ராய்டு 10 வழக்கமான தொகுப்பைக் கொண்டுவருகிறது.
Android 10 மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 10 உடன், பயனர்கள் சில புதிய வடிவமைப்பு கூறுகளைப் பெறுவார்கள், அதே நேரத்தில் புதிய முழுத்திரை சைகைகளும் இங்கே உள்ளன.
மாற்றப்பட்ட கூகுள் வழிசெலுத்தல் சைகைகளை (Google navigation gestures) இங்கே பயன்படுத்தலாம். ஒரு பயனர் திரும்பிச் செல்ல டிஸ்பிளேவின் இடது அல்லது வலது பக்கத்திலிருந்து ஸ்வைப் செய்யலாம்.
'ஸ்மார்ட் டிஸ்பிளே' ஆப்ஷன் ஆக்ஸிஜன்ஓஎஸ் 10-ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இது குறிப்பிட்ட நேரங்கள், இருப்பிடங்கள் மற்றும் நிகழ்வுகளின் அடிப்படையில் புத்திசாலித்தனமான தகவல்களைக் காண்பிக்கும்.
இந்த அப்டேட் 'கேம் ஸ்பேஸ்' செயலியையும் கொண்டுவருகிறது, இது உங்களுக்கு பிடித்த எல்லா விளையாட்டுகளையும் ஒரே இடத்தில் காண அதன் பயனர்கள் அனுமதிக்கிறது, மேலும் பல்வேறு settings-ஐயும் அணுகலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features