ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தயாரிப்பில் உள்ளதாகச் சொல்லப்படும் Nokia X7
இரு தினங்களுக்கு முன்புதான் இந்தியாவில் நோக்கியா 5.1 ப்ளஸ் (X5), நோக்கியா 6.1 (X6) ப்ளஸ் ஆகிய போன்களை எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. 5.1+ இன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லையெனினும்; 6.1+ இன் விலை 15,999ரூ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிதாக கசிந்துள்ள ஒரு படத்தால் நோக்கியா X7 போனும் தயாரிப்பில் இருப்பதை ஊகிக்க முடிகிறது. மேற்கூறப்பட்ட இரு மாடல்களைப் போலவே X7உம் திரையின் மேல்நடுப்பகுதியில் சிறுவெட்டு (display notch) அமைந்த வடிவத்தில் இருக்கும் எனத் தெரிகிறது. எனினும் இதுபற்றி கூடுதல் தகவல்கள் தற்போதைக்கு தெரியவில்லை.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரிபவர் வாயிலாக அண்மையில் கசிந்துள்ள படங்களின்படி, அதில் உள்ளது X7 போன்தான் என்று கூறப்படுகிறது. ஃபாக்ஸ்கான் ஏற்கனவே இதன் தயாரிப்பைத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. வெளியான படத்தை வைத்துப் பார்க்கும்போது, இதன் திரை அளவு 6 இன்ச்சுக்குக் கூடுதலாக இருக்கும் என்றும் உருவ விகிதம் (aspect ratio) 19:9 ஆக இருக்கும் என்றும் கணிக்கமுடிகிறது.
மேலும் சில தகவல்களின்படி சில மாதங்கள் கழித்து வெளியிடவுள்ள நோக்கியா பீனிக்ஸ் (Nokia Phoenix) போன்தான் இது என்றும் கூறப்படுகிறது. நோக்கியா பீனிக்ஸ், நோக்கியா X7 என்று எல்லாம் கூறப்படும் இந்த போனின் விலை 20,400 ரூபாயாக இருக்கலாம். செப்டம்பர் 15ஆம் தேதியில் வெளியிடப்படலாம் என்றும் தெரிகிறது. எனினும் இவை அனைத்தும் முழுமையாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் ஒரும் வரும் செய்திகள் அல்ல என்பதால் இவற்றை அப்படியே நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்