மொத்தம் 5 பின்புற கேமராக்கள், இன்று வெளியாகிறகிறதா 'நோக்கியா 9 பியூர்வியூ'?

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 6 ஜூன் 2019 13:00 IST
ஹைலைட்ஸ்
  • நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம்
  • அதனுடன்  'நோக்கியா 9 பியூர்வியூ'வும் வெளியிடப்படலாம்
  •  'நோக்கியா 9 பியூர்வியூ' 5 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது

இன்று இந்தியாவில் அறிமுகமாகுமா  'நோக்கியா 9 பியூர்வியூ'!

மொபைல் உலக காங்கிரஸ் 2019 மாநாட்டில் நோக்கியா நிறுவனத்தால் அறிமுகப்படுத்த சாதனங்களில், இந்த லென்ஸ் கேமரா அமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனின் அறிமுகமே முக்கியமான அறிமுகமாக இருந்தது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இன்னிலையில் இன்று காலை 11:30 மணிக்கு, புது டெல்லியில் ஒரு ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது, நோக்கியா நிறுவனம். முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வேறொரு ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டு அந்த ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமாகவுள்ளது என அறிவித்திருந்தாலும், இந்த 'நோக்கியா 9 பியூர்வியூ' ஸ்மார்ட்போனும் இந்தியாவில் நடக்கவுள்ள நிகழ்வில் அறிமுகபடுத்தப்படும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது பல டீசர்களை வெளியிட்டு இன்று அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு, இந்தியாவின் புது டெல்லி காலை 11:30 மணிக்கு துவங்குகிறது. மேலும், நோக்கியா நிறுவனம், இத்தாலியில் உலக நிகழ்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

 'நோக்கியா 9 பியூர்வியூ': விலை என்னவாக இருக்கும்?

ஐந்து பின்புற கேமராக்களை கொண்ட இந்த  'நோக்கியா 9 பியூர்வியூ' ஸ்மார்ட்போன் முதன்முதலில் மொபைல் உலக காங்கிரஸ் 2019 மாநாட்டில் நோக்கியா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னும் பெயர் வெளியிடப்படாத ஸ்மார்ட்போன் ஒன்றை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், இந்த 'நோக்கியா 9 பியூர்வியூ'வும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எச் எம் டி குலோபல் நிறுவனமும் இதுகுறித்து தகவலை வெளியிட்டுள்ளது. அண்ட்ராய்ட்-ஒன் அமைப்புடன் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் 699 டாலர்கள் (48,700 ரூபாய்)-க்கு அறிமுகமானது. இந்தியாவிலும் இதே விலையில் தான் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 'நோக்கியா 9 பியூர்வியூ': சிறப்பம்சங்கள்!

5.99-இன்ச் QHD+ திரை(1440x2960 பிக்சல்கள்) அளவு கொண்ட இந்த 'நோக்கியா 9 பியூர்வியூ' ஸ்மார்ட்போன், ஸ்னேப்ட்ராகன் 845 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவையும் கொண்டுள்ளது. மொத்தம் 5 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதில் மூன்று 12 மெகாபிக்சல் மோனோக்ரோம் கேமரா, மற்றும் இரண்டு 12 மெகாபிக்சல் RGB கலர் சென்சார் கொண்ட கேமரா. அதுமட்டுமின்றி செல்பிக்களுக்காக 20 மெகாபிக்சல் முன்புற கேமராவையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இன்-டிஸ்ப்லே ஃபிங்கர்பிரின்ட் மற்றும் 3,320mAh பேட்டரி அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன், வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமானது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Nothing Phone 3a Community Edition: டிசம்பர் 9 மாலை 6:30 மணிக்கு வெளியீடு!
  2. iPhone 17e-ல Dynamic Island கன்ஃபார்ம்! பெசல்ஸ் இன்னும் ஸ்லிம் ஆகுது! ₹57,000 ரேஞ்சில் ஆப்பிள் ட்ரீட்!
  3. சஞ்சார் சாத்தி செயலி: கட்டாய நிறுவலை அரசு திரும்பப் பெற்றது!
  4. புது 5G போன் லான்ச்! Redmi 15C 5G: 6.9" டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 50MP கேமரா
  5. புது Poco 5G போன்! ₹15,000-க்கும் குறைவா! C85 5G: 6000mAh பேட்டரி, 33W சார்ஜிங்! டிசம்பர் 9-ல் Flipkart-ல் வாங்கலாம்
  6. Triple Fold போன்! Samsung Galaxy Z TriFold-ன் விலை ₹2.20 லட்சம்! நீங்க வாங்குவீங்களா?
  7. iPhone 16 விலை ₹62,990: Croma-வின் வங்கி தள்ளுபடி சலுகை
  8. Apple-க்கும் மோடி அரசுக்கும் புது சண்டை! iPhone-ல் இனி Sanchar Saathi ஆப் வருமா?
  9. Galaxy Z Fold 8 வருது! கூடவே Apple-ஐ ஜெயிக்க ஒரு 'Wider Fold' மாடல்! Samsung-இன் மாஸ் ப்ளான்
  10. உங்ககிட்ட Original iPhone SE இருக்கா? இனி Apple Store-ல சர்வீஸ் கிடைக்குறது கஷ்டம்! முழு விவரம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.