Photo Credit: 9to5Google
லீக் செய்யப்பட்ட படத்தை வைத்து நிறைய விஷயங்களை புரிந்து கொள்ள முடிகிறது. கூகுள் அசிஸ்டென்டிற்கான ஷார்ட்-கட் இருப்பது தெரிகிறது
உலகம் முழுவதும் ஸ்மார்ட் போனின் வளர்ச்சி என்பது அபரிமிதமானதுதான். அதே நேரத்தில் சாதாரண ‘ஃபீச்சர் போன்கள்' பயன்படுத்தப்படுவதில்லை என்று சொல்ல முடியாது. இன்னும் சொல்லப் போனால் அந்த சாதாரண ஃபீச்சர் போன்கள், ஸ்மார்ட் ஃபீச்சர் போன்களாக தங்களை உருமாற்றிக் கொண்டு வருகின்றன.
தனது பழமையான டிசைன் மற்றும் இயக்கத்தை மாற்றிக் கொள்ளாமல், அதே நேரத்தில் ஸ்மார்ட் அம்சங்களையும் ஃபீச்சர் போன்கள் பல பெற்றிருக்கின்றன. எச்.எம்.டி நிறுவனம், தனது நோக்கியா நிறுவனத்துக்குக் கீழ் பல ஃபீச்சர் போன்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது அந்த நிறுவனம், நோக்கியா பிராண்டு கொண்ட ஆண்ட்ராய்டு இயங்கு மென்பொருள் உடனான ஃபீச்சர் போனை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாம். இந்தத் தகவல் உண்மையாக இருந்தால், இப்படி நோக்கியா - ஆண்ட்ராய்டு காம்போவில் வரும் முதல் போனாக அது இருக்கும்.
9to5Google என்ற தளத்தில் இது குறித்து ஒரு படம் லீக் செய்யப்பட்டுள்ளது. அதில் ‘நோக்கியா 220' போன் ஆண்ட்ராய்டு மென்பொருளில் இயங்குவது போலத் தெரிகிறது. அந்த போனில் எந்தவித பிராண்டு பெயரும் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.
லீக் செய்யப்பட்ட படத்தை வைத்து நிறைய விஷயங்களை புரிந்து கொள்ள முடிகிறது. கூகுள் அசிஸ்டென்டிற்கான ஷார்ட்-கட் இருப்பது தெரிகிறது. அதைப் போலவே யூடியூப், க்ரோம் ப்ரௌசர், கேமரா உள்ளிட்டவைகளுக்கு ஷார்ட்-கட் கீ இருப்பதையும் பார்க்க முடிகிறது.
இந்த லீக் ஆன படங்களை வைத்து, நிறைய விஷயங்களை யூகிக்க முடிகிறது. நோக்கியா - ஆண்ட்ராய்டு காம்போவில் ஒரு போன் வந்தால், அது எப்படியிருக்கும் என்பது ஆவலைத் தூண்டும் விஷயம்தான்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்