'ஆண்டுராய்டு P'யில் செயற்பட இருக்கும் நோக்கியா ஏ1 ப்ளஸ் ஸ்மார்ட் போன்

'ஆண்டுராய்டு P'யில் செயற்பட இருக்கும் நோக்கியா ஏ1 ப்ளஸ் ஸ்மார்ட் போன்

Photo Credit: Suomimobiili

ஹைலைட்ஸ்
  • நோக்கியா ஏ1 ப்ளஸ் ஸ்மார்ட் போன் விரைவில் வெளியாக உள்ளது
  • இன்-டிஸ்ப்ளே ஃபின்கர் ப்ரிம்ட் ஸ்கேனர் கொண்டுள்ளது
  • கேமரா ட்ரிப்பிள் செட்டப் வசதி உள்ளது
விளம்பரம்

எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திற்கு பல வெளியீட்டுகள் இந்த வருடம் காத்திருந்தாலும், நோக்கியா ஏ1 ப்ளஸ் ஸ்மார்ட் போன் வெளியீடு எதிர்ப்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 845 SoC, ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார் ஆகிய வசதிகளுடன் நோக்கியா ஏ1 ப்ளஸ் போன் வெளியாக உள்ளது. வின்ப்யூசர் ஊடக அறிக்கையில், தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான் உடன் இணைந்து ஐரோப்பிய சந்தையில் நோக்கியா ஏ1 ப்ளஸ் போனை வெளியிட எச்எம்டி க்ளோபல் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

நோக்கியா ஏ1 ப்ளஸ் ஸ்மார்ட் போன், ஆண்டுராய்டு பி வெர்ஷனில் செயற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏ1 ப்ளஸ் போனில், இன்-டிஸ்ப்ளே ஃபின்கர் ப்ரிண்ட் ஸ்கானர் கொண்டிருக்கும் என ஆய்வில் கூறப்பட்டது.  மேலும், OLED பேனலுடன், எல்ஜி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 

நோக்கியா

முக்கியமாக, போனில் கேமரா பிரச்சனைகள் உள்ளதால், 2018 ஆம் ஆண்டு மத்தியில் வெளியாக இருந்த நோக்கியா ஏ1 ப்ளஸ் தள்ளிப்போனது  என தகவல்கள் கிடைத்துள்ளது. பெரும்பாலும்,ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதங்களில் வெளியாகும்.

நோக்கியா 9 ஸ்மார்ட் போனின் அம்சங்களை கொண்டுள்ள நோக்கியா ஏ1 ப்ளஸ் போனில், 8 ஜிபி RAM, 256 ஜிபி ஸ்டோரேஜ், 3900mAh பேட்டரி, 6.01 இன்ச் டிஸ்ப்ளே, கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்பு ஆகியவை அடங்கும். ட்ரிப்பிள் காமரா செட்டப், இன்-க்ளாஸ் ஃபின்கர் ப்ரிண்ட் ரீடர், 18 காரட் கோல்டு ஃபினிஷ் பேனல், IP68 ரேட்டிங் ஆகியவை கொண்டுள்ளது.  முக்கியமாக ஸ்மார்ட் போனின் கேமரா 41 மெகா-பிக்சல், 20 மெகா-பிக்சல், 9.7 மெகா-பிக்சல் மற்றும் 4x ஜும் வசதி கொண்டுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Nokia, HMD Global, Nokia A1 Plus, Nokia 9
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »