அதிரடி விலைக் குறைப்பில் Nokia 9 PureView! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 24 பிப்ரவரி 2020 12:24 IST
ஹைலைட்ஸ்
  • Nokia 9 PureView ஒற்றை நீல நிற ஆப்ஷனில் பட்டியலிடப்பட்டுள்ளது
  • வலைத்தளம் 9 மாதங்கள் வரை no-cost EMI ஆப்ஷன்களை வழங்குகிறது
  • Nokia 9 PureView20 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் வருகிறது

Nokia 9 PureView, பின்புறத்தில் பென்டா-கேமரா அமைப்புடன் வருகிறது

Nokia 9 PureView-க்கு இந்தியாவில் மிகப்பெரிய விலைக் குறைப்பு கிடைத்துள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்தியா வலைத்தளம் இந்த போனை ரூ.34,999-க்கு விற்பனை செய்கிறது. அதாவது இந்தியாவில் ரூ.15,000 விலைக் குறைப்பாகும். 

Nokia website-ல் தற்போது Nokia 9 PureView-வின் விலை  ரூ.34,999-யாக உள்ளது. இந்த போன் ரூ.15,000 விலைக் குறைப்பைக் காண்கிறது, இந்தியாவில் அதன் வெளியீட்டு விலை ரூ.49,999 ஆகும். இந்த போன் ஒற்றை நீல நிற ஆப்ஷனில் வழங்கப்படுகிறது. Nokia 9 PureView கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் விலைக் குறைப்பு இதுவாகும். நோக்கியா வலைத்தளம், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளில் ஒன்பது மாதங்கள் வரை no-cost EMI ஆப்ஷன்களைக் கொண்ட போனை பட்டியலிட்டுள்ளது.


Nokia 9 PureView விவரக்குறிப்புகள்: 

டூயல்-சிம் (நானோ) Nokia 9 PureView, Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 5.99 இன்ச் குவாட்-எச்டி + (1440x2960 ​​பிக்சல்கள்) POLED திரை கொண்டுள்ளது. மேலும், இது 6 ஜிபி ரேம் கொண்ட ஸ்னாப்டிராகன் 845 SoC-யால் இயக்கப்படுகிறது. 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் உள்ள ஐந்து கேமராக்களில் மூன்று 12 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார்கள் மற்றும் இரண்டு 12 மெகாபிக்சல் ஆர்ஜிபி சென்சார்கள் அடங்கும்.

முன், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா அமைப்பு உள்ளது. உள்ளே 3,320mAh பேட்டரியும் உள்ளது, மேலும், இந்த போன் ஐபி 67 நீர் மற்றும் தூசி சான்றிதழ் கொண்டது. இது in-display fingerprint ஸ்கேனரைக் கொண்டுள்ளது. மேலும், இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C port மற்றும் NFC ஆகியவை அடங்கும். போனில் 3.5mm audio jack இல்லை.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17 Air: 5.5mm மெல்லிய டிசைன், ₹80,000-க்கு 5G! ஆப்பிளின் புது ஸ்லிம் ஹீரோ!
  2. Apple Watch Series 11, Ultra 3, SE 3: 5G RedCap, S11 சிப், சாட்டிலைட் SOS! #AweDropping இவென்டில் அறிமுகம்! #AppleWatch
  3. iPhone 17 Pro-ல 8X ஜூம், 5,000mAh பேட்டரி, வேப்பர் கூலிங்! 'Awe Dropping' இவென்டுக்கு முன் பெரிய லீக்ஸ்
  4. iPhone 17 Air, Watch Series 11, AirPods Pro 3! ஆப்பிளின் 'Awe Dropping' இவென்ட் இன்று 10:30 PM IST-ல லைவ்
  5. "இது வேற லெவல்!" - Apple-ன் 'Awe Dropping' நிகழ்வு! iPhone 17, Apple Watch Series 11, AirPods Pro 3-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
  6. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  7. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  8. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  9. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  10. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.