இந்த 'நோக்கியா 9 பியூர்வியூ' ஸ்மார்ட்போன், 49,999 ரூபாய் என்ற விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நீல நிறத்தில் மட்டுமே இந்த 'நோக்கியா 9 பியூர்வியூ' ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது
இறுதியாக 'நோக்கியா 9 பியூர்வியூ' ஸ்மார்ட்போன், இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. எச்.எம்.டி குளோபல் புதன்கிழமையன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 'நோக்கியா 9 பியூர்வியூ' ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டு 12 மெகாபிக்சல் RGB கலர் சென்சார் கொண்ட கேமராக்களுடன் 5 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். ஸ்னேப்ட்ராகன் 845 எஸ் ஓ சி ப்ராசஸர், 3,320mAh பேட்டரி என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது
ஒரே ஒரு வகை கொண்ட இந்த 'நோக்கியா 9 பியூர்வியூ' ஸ்மார்ட்போன், 49,999 ரூபாய் என்ற விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது. நீலம் (Midnight Blue) என்ற ஒரே வண்ணத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன், ஜூலை 17 அன்று விற்பனைக்கு வரவுள்ளதாக நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனை நோக்கியா தளத்தில் பெற்றால், 5,000 ரூபாய் கிப்ட் கார்டை வழங்கவுள்ளது நோக்கியா நிறுவனம். மேலும் குறைந்த கால சலுகையாக, இந்த ஸ்மார்ட்போணுடன் நோக்கியா 705 இயர்போன்களை இலவசமாக வழங்கவுள்ளது.
ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்புகொண்ட இந்த 'நோக்கியா 9 பியூர்வியூ' ஸ்மார்ட்போன், ஸ்னேப்ட்ராகன் 845 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவையும் கொண்டுள்ளது.
5.99-இன்ச் QHD+ திரை(1440x2960 பிக்சல்கள்) அளவு, 18.5:9 திரை விகிதம், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற திரை அம்சங்க்ளை கொண்டுள்ளது, இந்த 'நோக்கியா 9 பியூர்வியூ'.
மொத்தம் 5 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதில் மூன்று 12 மெகாபிக்சல் மோனோக்ரோம் கேமரா, மற்றும் இரண்டு 12 மெகாபிக்சல் RGB கலர் சென்சார் கொண்ட கேமரா. அதுமட்டுமின்றி செல்பிக்களுக்காக 20 மெகாபிக்சல் முன்புற கேமராவையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான ஃபோகல் லென்தை (Focal Length) கட்டுப்படுத்தும் திறன் கொண்டு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3,320mAh பேட்டரி அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன், வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வை-பை, ப்ளூடூத் வசதிகளுடன், அருகாமையில் கொண்டு சென்றாலே இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் என்.எஃப்.சி (NFC) வசதியையும் கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 3.5mm ஹெட்போன் ஜாக் வசதி அளிக்கப்பட்டுள்ளது. 'நோக்கியா 9
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Hubble Data Reveals Previously Invisible ‘Gas Spur’ Spilling From Galaxy NGC 4388’s Core
Dhurandhar Reportedly Set for OTT Release: What You Need to Know About Aditya Dhar’s Spy Thriller
Follow My Voice Now Available on Prime Video: What You Need to Know About Ariana Godoy’s Novel Adaptation
Rare ‘Double’ Lightning Phenomena With Massive Red Rings Light Up the Alps