Nokia 9 PureView இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.49,999-க்கு அறிமுகப்படுத்தியது. இப்போது நோக்கியா இணையதளத்தில் ரூ.34.999-யாக பட்டியலிடப்பட்டுள்ளது.
Nokia 9 PureView, பின்புறத்தில் பென்டா-கேமரா அமைப்புடன் வருகிறது
Nokia 9 PureView-க்கு இந்தியாவில் மிகப்பெரிய விலைக் குறைப்பு கிடைத்துள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்தியா வலைத்தளம் இந்த போனை ரூ.34,999-க்கு விற்பனை செய்கிறது. அதாவது இந்தியாவில் ரூ.15,000 விலைக் குறைப்பாகும்.
Nokia website-ல் தற்போது Nokia 9 PureView-வின் விலை ரூ.34,999-யாக உள்ளது. இந்த போன் ரூ.15,000 விலைக் குறைப்பைக் காண்கிறது, இந்தியாவில் அதன் வெளியீட்டு விலை ரூ.49,999 ஆகும். இந்த போன் ஒற்றை நீல நிற ஆப்ஷனில் வழங்கப்படுகிறது. Nokia 9 PureView கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் விலைக் குறைப்பு இதுவாகும். நோக்கியா வலைத்தளம், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளில் ஒன்பது மாதங்கள் வரை no-cost EMI ஆப்ஷன்களைக் கொண்ட போனை பட்டியலிட்டுள்ளது.
டூயல்-சிம் (நானோ) Nokia 9 PureView, Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 5.99 இன்ச் குவாட்-எச்டி + (1440x2960 பிக்சல்கள்) POLED திரை கொண்டுள்ளது. மேலும், இது 6 ஜிபி ரேம் கொண்ட ஸ்னாப்டிராகன் 845 SoC-யால் இயக்கப்படுகிறது. 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் உள்ள ஐந்து கேமராக்களில் மூன்று 12 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார்கள் மற்றும் இரண்டு 12 மெகாபிக்சல் ஆர்ஜிபி சென்சார்கள் அடங்கும்.
முன், 20 மெகாபிக்சல் செல்பி கேமரா அமைப்பு உள்ளது. உள்ளே 3,320mAh பேட்டரியும் உள்ளது, மேலும், இந்த போன் ஐபி 67 நீர் மற்றும் தூசி சான்றிதழ் கொண்டது. இது in-display fingerprint ஸ்கேனரைக் கொண்டுள்ளது. மேலும், இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C port மற்றும் NFC ஆகியவை அடங்கும். போனில் 3.5mm audio jack இல்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Baldur's Gate 3 Developer Larian Studios Says It Uses Generative AI, CEO Responds to Backlash
Honor Win, Honor Win RT Launch Date, Colourways, RAM and Storage Configurations Revealed