"5 கண்களில் சக்தியை அனுபவிக்க தயாராக இருங்கள். 'நோக்கியா 9 பியூர்வியூ' விரைவில் வருகிறது!" என்று நோக்கியா நிறுவனம் கூறியுள்ளது.
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள 'நோக்கியா 9 பியூர்வியூ'
பல தாமதங்களுக்கு பிறகு, இந்த அண்டின் துவக்கத்தில் பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 'நோக்கியா 9 பியூர்வியூ' ஸ்மார்ட்போன் அறிமுகம செய்யப்பட்டது. முன்னதாக ஜூன் மாதத்தில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிறது என்றவாறான தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்னும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகாத நிலையே நீடிக்கிறது. இன்னிலையில் நோக்கியா இந்தியா மொபைல் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு இந்த 'நோக்கியா 9 பியூர்வியூ' பற்றி டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டீசரில் விரைவில் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதை உறுதி செய்துள்ளது. மேலும், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை எச்.எம்.டி குளோபல் நிறுவனம் அறிவிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளது.
நோக்கியா நிறுவனம், தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில்,"5 கண்களில் சக்தியை அனுபவிக்க தயாராக இருங்கள். 'நோக்கியா 9 பியூர்வியூ' விரைவில் வருகிறது!" என்று குறிப்பிட்டுள்ளது.
Explore much more than meets the eye with the power of 5. Ultimate focal length control on the Nokia 9 PureView. Coming soon. #ExploreEveryDetail pic.twitter.com/l9RUWaGpH1
— Nokia Mobile India (@NokiamobileIN) July 4, 2019
எப்போது அறிமுகமாகிறது என்ற தேதி குறிப்பிடப்படாத நிலையில், இந்தியாவில் 'நோக்கியா 9 பியூர்வியூ' எப்போது அறிமுகமாகிறது என்பதை எச்.எம்.டி குளோபல் நிறுவனத்தால் விரைவில் அறிவிக்கப்படும்.
'நோக்கியா 9 பியூர்வியூ': எதிர்பார்க்கப்படும் விலை!
ஐந்து பின்புற கேமராக்களை கொண்ட இந்த 'நோக்கியா 9 பியூர்வியூ' ஸ்மார்ட்போன் முதன்முதலில் உலக மொபைல் காங்கிரஸ் 2019 மாநாட்டில் நோக்கியா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்காவில், இந்த ஸ்மார்ட்போன் 699 டாலர்கள் (48,700 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்தியாவிலும் இதே விலையில் தான் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'நோக்கியா 9 பியூர்வியூ': சிறப்பம்சங்கள்!
ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்புகொண்ட இந்த 'நோக்கியா 9 பியூர்வியூ' ஸ்மார்ட்போன், ஸ்னேப்ட்ராகன் 845 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவையும் கொண்டுள்ளது.
5.99-இன்ச் QHD+ திரை(1440x2960 பிக்சல்கள்) அளவு, 18.5:9 திரை விகிதம், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் போன்ற திரை அம்சங்க்ளை கொண்டுள்ளது, இந்த 'நோக்கியா 9 பியூர்வியூ'.
மொத்தம் 5 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதில் மூன்று 12 மெகாபிக்சல் மோனோக்ரோம் கேமரா, மற்றும் இரண்டு 12 மெகாபிக்சல் RGB கலர் சென்சார் கொண்ட கேமரா. அதுமட்டுமின்றி செல்பிக்களுக்காக 20 மெகாபிக்சல் முன்புற கேமராவையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான ஃபோகல் லென்தை (Focal Length) கட்டுப்படுத்தும் திறன் கொண்டு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3,320mAh பேட்டரி அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்போன், வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வை-பை, ப்ளூடூத் வசதிகளுடன், அருகாமையில் கொண்டு சென்றாலே இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் என்.எஃப்.சி (NFC) வசதியையும் கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 3.5mm ஹெட்போன் ஜாக் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
ACT Fibernet Launches Revamped Broadband Plans Starting at Rs. 499
Apple Announces App Store Awards 2025 Winners; Top Apps Include Tiimo, Cyberpunk 2077: Ultimate Edition, and More