இந்தியாவில் இன்று விற்பனைக்கு வருகிறது நோக்கியா 3.1

விளம்பரம்
Written by Ankit Chawla மேம்படுத்தப்பட்டது: 21 ஜூலை 2018 12:19 IST
ஹைலைட்ஸ்
  • நோக்கியா 3.1 ஸ்மார்ட்ஃபோனின் விலை 10,499 ரூபாய்
  • பேடிஎம் மால் மற்றும் நோக்கியா இணையதளத்தில் கிடைக்கும்
  • மூன்று நிறங்களில் இந்த மொபைல் விற்பனைக்கு வருகிறது

நோக்கியா 3.1 ஸ்மார்ட்ஃபோன் வியாழன் அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் விலை 10,499 ரூபாய். 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் மட்டும் இந்தியாவில் அறிமுகம் ஆனது. ரெட்மி 5, ரெட்மி நோட் 5, ரியல்மி 1 மற்றும் ஹானர் 7சி நிறுவனங்கள் உடன் நோக்கியா 3.1 போட்டியிடுகிறது.

தொடக்க ஆஃபர்கள்:

ஆன்லைனில் பேடிஎம் மால் இணையதளத்திலும், ஆஃப்லைனில் மொபைல் விற்பனை நிலையங்களில் இன்று முதல்  இந்த மொபைல் கிடைக்கும். தொடக்க ஆஃபராக, மொபைல் விற்பனை நிலையங்களில் பேடிஎம் மால் QR கோட் மூலம் ஸ்கேன் செய்து மொபைல் வாங்குபவர்களுக்கு, சில ஆஃபர்கள் தரப்படுகிறது. அடுத்து முறை பேடிஎம் மாலில் என்ன பில் கட்டணம் செலுத்தினாலும், ரீச்சார்ஜ் செய்தாலும் 10% கேஷ்பேக் வழங்கப்படும். மேலும் 250 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சினிமா டிக்கெட்களுக்கு, கேஷ்பேக் வவுச்சர்களும் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் பேடிஎம்மில் டிக்கெட் புக் செய்து கேஷ் பேக் பெறலாம்.ஐ.சி.ஐ,சி.ஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி மொபைல் வாங்குபவர்களுக்கு 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தில், ஆண்ட்ராய்டு ஒன் அவுட் ஆஃப் தி பாக்ஸ் ப்ரோகிராம்மில், டூயல் நேனோ சிம் ஸ்லாட் கொண்டிருக்கிறது நோக்கியா 3.1. 5.2 இன்ச் ஹெச்,டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் உள்ளது. கேமராவை பொறுத்தவரை 13 மெகா பிக்சல் பின்புற கேமரா, ஆட்டோ ஃபோக்கஸுடன் இருக்கிறது. f/2.0 அப்பேர்ச்சரும், எல்.இ.டி ஃபிளாஷும் கொடுக்கப்பட்டுள்ளது. முன் பக்கத்தில் 8 மெகா பிக்சல், ஃபிக்ஸட் ஃபோக்கஸ் கேமரா உள்ளது. 2990 mAh திறன் கொண்ட பேட்டரி, சார்ஜ் தருகிறது. 

நெட்வொர்க் என்று வரும் போது 4ஜி வோல்ட், வைஃபை 802.11 ஏ.சி, ப்ளூடூத் 5.0, ஜி.பி.எஸ், மைக்ரோ யூ.எஸ்.பி, 3.5மி.மீ ஹெட்ஃபோன் ஜேக்கும் உள்ளது. ஆக்செலரோமீட்டர், லைட் சென்சார், கைரோஸ்கோப், மேக்னடோமீட்டர் மற்றும் பிராக்ஸிமிட்டி சென்ன்சார்களும் இந்த ஸ்மார்ட்ஃபோனில் இடம் பிடிக்கின்றன.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
  2. விவோ X500 ப்ரோ மேக்ஸ்: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP LOFIC கேமராவுடன் அறிமுகமாக வாய்ப்பு
  3. அறிமுகத்திற்கு முன் கீக்பெஞ்சில் ஷாவோமி 17T: டைமென்சிட்டி 8500 சிப் மற்றும் 12GB RAM விவரங்கள் கசிந்தன
  4. விவோ X போல்ட் 6-ல் 200MP கேமரா மற்றும் பெரிய பேட்டரி; ஷாவோமி மிக்ஸ் போல்ட் 6 வெளியீட்டுத் தகவல் கசிந்தது
  5. போக்கோ C81x 4G vs லாவா போல்ட் N2 ப்ரோ vs ஐடெல் ஜீனோ 100: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் அட்வான்ஸ்டு ப்ரொடெக்ஷனை எவ்வாறு இயக்குவது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  7. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  8. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  9. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  10. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.