'உலக மொபைல் காங்கிரஸ் 2019' நிகழ்ச்சியில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது 5ஜி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ததை தொடர்ந்து தற்பொது லெனோவா நிறுவனமும் தனது 5ஜி தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது.
லெனோவா போன் நிறுவனத்தின் துணைத்தலைவரான எட்வர்டு சாங், தனது நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான Z6 ப்ரோ ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களையும், 5ஜி நெட்வொர் பற்றிய தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.
மேலும் அவர் விரைவில் லெனோவா Z6 ப்ரோ அறிமுகமாகும் என்றும் அந்த போனில் 5ஜி இணைய சேவையை பயன்படுத்த முடியும் என்றும் கூறினார். மேலும் இந்த லெனோவா Z6 ப்ரோ ஸ்மார்ட்போன் 'ஹைபர் விஷன்' கேமராவும் 'ஹைப்பர் வீடியோஸ்' என பல முன்னணி தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் கூறினார்.
இதை பற்றிய முழு தகவல்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், இந்த புதிய அறிவிப்பால் இந்த போனுக்கான எதிர்பார்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் அந்நிறுவனத்தின் துணை தலைவர் இந்த லெனோவா Z6 ப்ரோ முழு செயல்பாடுகளுடன் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என தெரிவித்தார். சீனாவில் முதலில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் மாற்ற நாடுகளில் வெளியாகுமா என இன்னும் அறியப்படவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்