உலக மொபைல் காங்கிரஸ் 2019' நிகழ்ச்சியில் பல விதமான மடங்கும் போன்கள் (Foldable Phones) அறிமுகமாகின, ஆனால் தற்பொழுது முதல் முறையாக ஒரு மடங்கும் ஸ்மார்ட்வாட்ச் (Foldable smartwatch) அறிமுகமாகவுள்ளது. ZTE என்னும் நிறுவனம் சார்பாக அறிமுகமாகியிருக்கும் இந்த நூபியா ஆல்ஃபா, வளையும் ஓலெட் திரை, கேமரா மற்றும் இ சிம்கார்ட் உதவியை கொண்டுள்ளது.
ஆண்டுராய்டு போன்களில் பார்க்கப்படும் வசதிகளை இந்த புதிய மடங்கும் ஸ்மார்ட்வாட்ச்களிலும் பார்க்கலாம். இந்த நூபியா ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச், ஸ்னாப்டிராகன் வியர் 21000 SoC , 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டுள்ளது. பிரத்தியேக மென்பொருளில் இயங்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச், 5000mAh பேட்டரி வசதியுடன் வெளியாகுகிறது.
பிரேஸ்லெட் (Bracelet) போல் காட்சியளிக்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச் என்னதான் 4 இஞ்ச் திரை கொண்டிருந்தாலும், ஃபோன்கால்கள், புகைப்படம் எடுக்கும் வசதி மட்டுமல்லாமல் ஆப்களையும் பயன்படுத்த முடிகிறது. மேலும் பிற ஸ்மார்ட்வாட்சுகளை போல இதய துடிப்பின் அளவையும் நம்மால் கணக்கிட முடிகிறது.
உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகி இருக்கும் நிலையில் வரும் ஏப்ரல் மாதம் இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வெளியாகுகிறது குறிப்பிடத்தக்கது.
அசைவுகளால் இந்த ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்த முடிகிற நிலையில் வலது புறத்தில் இரண்டு பட்டன்கள் வாட்சின் உள்ளே இருக்கும் செயலிகளை கட்டுபடுத்த உதவுகிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் உருவாக்கப்பட்ட இந்த நூபியா ஸ்மார்ட்வாட்ச் கோல்டு மற்றும் கருப்பு நிறங்களில் வெளியாகும் என தகவல் வந்துள்ளது. மேலும் வாட்டர் ரெஸ்சிஸ்டன்ட் எனக் கூறப்படும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளு டூத் அல்லது சிம்கார்ட் மூலமாக பயன்படுத்த முடியும்.
சுமார் ரூபாய் 44,300 மதிப்புடைய பிளாக் ப்ளு டூத் மாடல் வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெளியாகவுள்ளது. அதுபோல் ரூபாய் 52,400 மதிப்புள்ள சிம்கார்ட் வசதியுடைய ஸ்மார்ட்வாட்ச் வரும் ஏப்ரலில் சீனாவில் வெளியாகவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்