ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் நடந்து கொண்டிருக்கும் 'உலக மெபைல் காங்கிரஸ் 2019' நிகழ்ச்சியில் பல முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. உலகமெங்கும் இருக்கும் தொழிநுட்பப் பிரியர்களிடையே இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நேற்று முதல் போன்கள் மற்றும் சமீபத்திய தொழிநுட்பக் கருவிகள் வெளியானதை அடுத்து, சோனி போன்கள் குறித்த தகவல்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன.
மேலும் இந்த நிகழ்ச்சியில் உலகின் பல சிறந்த பிராண்டுகள் தங்களது மொபைல் வகைகளை அறிமுகம் செய்ய உள்ளன. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் சார்பாக இதுவரை சோனி எக்ஸ்பிரியா 1, சோனி எக்ஸ்பிரியா 10 மற்றும் சோனி எக்ஸ்பிரியா 10 பிளஸ் ஆகிய போன்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சோனி எக்ஸ்பிரியா 1 இந்தியாவில் ரூபாய் 74,200-க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள செய்திபடி அமெரிக்காவில் கறுப்பு மற்றும் ஊதா நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வெளியாக உள்ளது.
சோனி எக்ஸ்பிரியா 1 அல்ட்ரா - டால் சினிமா டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. கேமிங் வசதிகளுக்கு ஏற்றவாறு இந்தத் திரை வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மொபைலில் புகைப்படங்களை எடுக்க விரும்புபவர்களுக்கு சோனி எக்ஸ்பிரியா டூயல் போட்டோ டையோட் டெக்னாலஜி என்ற புதிய தொழிநுட்பம் மூலம் குறைந்த வெளிச்சம் இருக்கும் இடத்திலும் ஆட்டோ ஃபோக்கஸ் செய்ய உதவுகிறது.
மேலும் இந்த போனில் கானொளி காட்சியை பதிவு செய்யும் போது ஏற்படும் சப்தங்களை (video noise) முழுவதுமாக தடுக்க முடிகிறது. அதுபோல் புகைப்படங்களில் ஏற்படும் 'ஷேக்'யை தவிர்க்க 'ஆப்டிகல் ஸ்டெடி ஷாட் டெக்னாலஜி' என்னும் தொழிநுட்பத்தை பொருத்தியுள்ளது சோனி.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்