சோனி தாக்கல் செய்த காப்புரிமை விண்ணப்பம் hole-punch வடிவமைப்பு இருப்பதைக் குறிக்கிறது.
Photo Credit: LETSGODIGITAL
சோனி ஸ்மார்ட்போன் இடதுபுறத்தில் நேரத்தையும், வலது புறத்தில் பேட்டரி நிலையையும் காண்பிக்கும்
ஜப்பானிய எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளர், 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸின் (Mobile World Congress) போது சோனியின் புதிய flagship Xperia போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் சாதனத்தில் hole-punch கேமராவைக் கொண்டிருக்கும் என்று காப்புரிமை தெரிவிக்கிறது.
காப்புரிமையில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்கிரீன் ஷாட்கள் புதிய சோனி ஸ்மார்ட்போன் இடதுபுறத்தில் நேரத்தையும், வலது புறத்தில் பேட்டரி நிலையையும், மேல் மூலைகளை பயன்படுத்தி காண்பிக்கும் என்று GSM Arena தெரிவித்துள்ளது. எனவே, hole-punch கேமரா, நடுவில் வைக்கப்படும் என்பதைக் குறிக்கலாம். ஸ்மார்ட்போன் multi-window செயல்பாட்டை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![]()
சோனி தனது சமீபத்திய flagship போன்களில் 21: 9 aspect ratio-வை ஏற்றுக்கொண்டது. மேலும், செல்ஃபி கேமராவை திரையில் நகர்த்துவது, நிறுவனம் திரையை மேலும் நீட்டிக்க அனுமதிக்கும். இந்த சாதனம் 12GB RAM உடன் இணைக்கப்பட்டு, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 865 SoC-யை கொண்டிருக்கும் என்று வதந்தி பரவியுள்ளது.
கூடுதலாக, இந்த சாதனம் 5G இணைப்பு மற்றும் பின்புறத்தில் ஆறு கேமராக்கள் மற்றும் ஒரு QHD திரையுடன் வரும் என்று நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு சோனி தனது Xperia 10 மற்றும் 10 Plus உடன் Xperia 1-ஐ MWC-ன் போது வெளியிட்டது.
தனித்தனியாக, Sony Xperia K8220 பட்டியல் சமீபத்தில் கீக்பெஞ்சில் காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது முக்கிய விவரக்குறிப்புகளைக் குறிக்கிறது. K8220 என்ற குறியீட்டுடன் பெயரிடப்பட்ட சோனி ஸ்மார்ட்போன் single-core மற்றும் multi-coreர் சோதனைகளில் 465 மற்றும் 1,757 மதிப்பெண்களைப் பதிவு செய்தது. பட்டியலின்படி, Sony Xperia K8220, 8GB RAM உடன் இணைக்கப்பட்டு Android 10-யில் இயங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S26, Galaxy S26 Ultra to Be Slimmer and Lighter Than Their Predecessors, Tipster Claims
Apple's iOS 26.2 Beta 3 Rolled Out With AirDrop Upgrades, Liquid Glass Tweaks and More