வெளியானது ஓப்போவின் 'அன்டர்-டிஸ்ப்லே கேமரா': எப்படி இருக்கிறது?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
வெளியானது ஓப்போவின் 'அன்டர்-டிஸ்ப்லே கேமரா': எப்படி இருக்கிறது?

ஓப்போ காட்சி படுத்திய 'அண்டர் டிஸ்ப்லே கேமரா'

ஹைலைட்ஸ்
 • ஷாங்காயில் நடைபெற்ற உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் அறிமுகம்
 • இந்த தொழில்நுட்ப ஒரு நல்ல முழு நீள திரை அனுபவத்தை அளிக்கும், ஓப்போ
 • சியோமி மற்றும் ஹானர் நிறுவனங்களும் இதன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது

கேமரா பரிணாமத்தின் ஒரு வளர்ச்சியாக சில நாட்களுக்கு முன்னர் 'அன்டர்-டிஸ்ப்லே கேமரா' என்ற தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக சியோமி மற்றும் ஓப்போ நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தகவல்களை வெளியிட்டது. அந்த போட்டியில் தன்னை முன்னிருத்திக்கொள்ள, இந்த 'அன்டர்-டிஸ்ப்லே கேமரா' எப்படி செயல்படுகிறது என்பதை விவரித்திருந்தது. ஆனால், தற்போது ஓப்போ நிறுவனம், இந்த  'அன்டர்-டிஸ்ப்லே கேமரா' பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போனை காட்சி படுத்தியுள்ளது. இந்த கேமரா ஷாங்காயில் நடைபெற்ற 2019 உலக மோபைல் காங்கிரஸ் மாநாட்டில் காட்சி படுத்தப்பட்டது. 

'அன்டர்-டிஸ்ப்லே கேமரா' தொழில்நுட்பத்தின் மூலம், மொபைல்போன் பயன்பாட்டாளர்கள் செல்பி, பேஷ் அன்லாக் அம்சங்களுடன் முழு நீள திரை அனுபவத்தை பெறலாம் என குறிப்பிட்டுள்ளது, ஓப்போ நிறுவனம். மேலும், இந்த கேமரா அதிக ஒளியை உட்கொண்டு நல்ல புகைப்படங்களை வெளியிடும் என ஓப்போ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

இது குறித்து ஓப்போ நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் கியோ ஜியோடிங் கூறுகையில்,"இந்த 'அன்டர்-டிஸ்ப்லே கேமரா' தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு நல்ல மூழு நீள திரை அனுபவத்தை பெருவார்கள் என ஓப்போ நிறுவனம் நம்புகிறது", எனக் கூறியுள்ளார்.

முன்னதாக இந்த கேமரா எப்படி செயல்படும் என்ற விளக்கத்தை சியோமி நிறுவனம் அளித்திருந்தது. அதன்படி, நீங்கள் செல்பி எடுக்க உங்கள் ஸ்மார்ட்போனின் கேமராவை திறந்தால், இந்த கேமராவின் மேலுள்ள திரை ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட திரையாக மாறிவிடும். பின் முன்புற கெமராவில் எளிதாக புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். சாதரனமாக ஒரு ஸ்மார்ட்போனின் திரை என்பது எதிர்மின் வாய் (Cathode), ஒளிரும் பொருள் (Organic Luminiscent Material), நேர்மின் வாய் (Anode) என மூன்று அடுக்குகளை கொண்டிருக்கும். சாதாரனமான திரையில் இந்த எதிர்மின் வாய் மற்றும் நேர்மின் வாயை கடந்து ஓளி உட்புகாது. இந்த திரையின் அடுக்கில் ஒரு பகுதியான ஒளிரும் திரை ஒளியை வெளிப்படுத்தும். இது சாதாரன திரையின் அமைப்பு. ஆனால் 'அண்டர்-டிஸ்ப்லே கேமரா' பொருத்தப்பட்டுள்ள திரையின் அடுக்குகளில் உள்ள எதிர்மின் வாய் மற்றும் நேர்மின் வாய் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதாக அமைந்திருக்கும். இதன் மூலம், கேமராக்களுக்குள் செல்லும்போது, ஒளி உள்ளே செல்லும், புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம். மற்ற நேரங்களில் சாதாரன திரை போல இந்த திரை செயல்படும் என சியோமி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

இந்த தொழில்நுட்பத்திலேயேதான் ஓப்போவின் 'அன்டர்-டிஸ்ப்லே கேமரா'-வும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஓப்போ மற்றும் சியோமி நிறுவனம் மட்டுமின்றி ஹானர் நிறுவனமும் இந்த  'அன்டர்-டிஸ்ப்லே கேமரா' ஸ்மார்ட்போனை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கடந்த மாதம் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. சாம்சங் கேலக்ஸி நோட் 20, நோட் 20 அல்ட்ரா அறிமுகம்! விலை மற்றம் சலுகை விவரங்கள் இதோ!
 2. PUBG Update: பீட்டா வெர்ஷனில் Erangel 2.0 மேப் அறிமுகம்!
 3. Whatsapp Update: புதிதாக வரவுள்ள செர்ச் ஆப்ஷன், எக்ஸ்பைரி மெசேஜ் வசதிகள்!
 4. Xiaomi சுதந்திர நாள் சிறப்பு விற்பனை: ரெட்மி K20 Pro ஸ்மார்ட்போனுக்கு ரூ.4,000 தள்ளுபடி!
 5. Mi TV Stick அறிமுகம்..! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ.!!
 6. வாட்ஸ்அப்பில் பிரவுசிங் அறிமுகம்! இனி Fake News-களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!!
 7. Redmi 9 Prime அறிமுகம்! பட்ஜெட் விலையில் சூப்பர் ஸ்மார்ட்போன்!!
 8. நான்கு கேமராக்களுடன் Realme V5 ஸ்மார்ட்போன் அறிமுகம்!
 9. வரும் 6 ஆம் தேதி Flipkart Big Saving Days Sale ஆரம்பம்! சலுகை விவரங்கள் இதோ!!
 10. Amazon Prime Day Sale: ஸ்மார்ட்போன்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்கள்!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com