கூடுதலாக மேக் புக் ஏர் அடுத்தப்படியாக 13 இன்ச் லேப்-டாப் அறிமுகம் ஆகும் என்று ப்ளூம்பர்க் இணையதளம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது
ஆப்பிள் நிறுவனம் புதிய மாடல் போன்களை நாளை வெளியிடுகிறது என்று அறிவித்துள்ளது. அதில், புதிய ஐபோன்கள், புதுப்பிக்கப்பட்ட ஐபாட் ப்ரோஸ், ஆப்பிள் வாட்சுகள், மேக் மினி ஃபோகஸ்டு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஆகியவை வெளியாக உள்ளன என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது
கலிஃபோர்னியாவில், செப்டம்பர் 12 ஆம் தேதி நடக்க இருக்கும் நிகழ்ச்சியில், புதிய மாடல்கள் வெளியீடு நடைபெறும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட ஃபாஸ்ட் ப்ராஸஸர், சிறப்பான கேமரா, 5.8 இன்ச் ஸ்க்ரீனுடன் ஆப்பிள் ஐபோன் Xs வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐபோன் X போனின் புதுப்பிக்கப்பட்ட மாடலே இது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஐபோன் Xs மேக்ஸ் என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட ஆப்பிள் போன் வெளியாக உள்ளது எனவும் ஆப்பிள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து, ஐபோன் X போனின் குறைந்த விலை பட்ஜெட் போனாக, சிறிய மாற்றங்களுடன், 6.1 இன்ச் ஸ்க்ரீன், LCD, OLED ஆகிய வசதிகள் கொண்ட ஐபோன் Xr வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் புதிய போன்களை விரைவில் சந்தைக்கு அனுப்ப வேண்டும் என்ற முனைப்பில் ஆப்பிள் நிறுவனம் இறங்கியுள்ளது. டிசம்பர் மாதம் வரும் விடுமுறைகளுக்கு முன், புதிய போன்கள் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், 2018 ஆம் ஆண்டில், அதிக அளவிலான ஸ்மார்ட் வாட்ச் விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் ஆப்பிள் முதல் இடம் பிடித்துள்ளது. 4.7 மில்லியன் யூனிட்கள் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் வாட்சுகள் விற்பனைக்கு வர உள்ளன
ஆப்பிள் ஐபோன்கள், ஸ்மார்ட் வாட்ச் தவிர ஏர் பவர் வையர்லெஸ் சார்ஜர் அறிமுகமாக உள்ளது. இந்த வையர்லெஸ் சார்ஜர் மூலம், ஐபோன், ஐபாட், ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றை ஒரே சமயம் சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. கூடுதலாக மேக் புக் ஏர் அடுத்தப்படியாக 13 இன்ச் லேப்-டாப் அறிமுகம் ஆகும் என்று ப்ளூம்பர்க் இணையதளம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Tata Punch 2026 Facelift Launched with Major Tech Upgrades and Updated Design: Price, Booking Details
iQOO Z11 Turbo Selfie Camera Details Teased Ahead of January 15 Launch