Redmi K20 இந்தியாவில் MIUI 11 update-ஐப் பெற தொடங்கியுள்ளது. Redmi Note 8 Pro மற்றும் Redmi Note 8-வை அறிமுகப்படுத்தியவுடன் வெளியிடப்பட்டது. புதிய MIUI update, புதிய "minimalistic design" மற்றும் system-wide dark mode-ஐ வழங்குகிறது.
MIUI 11 புதுப்பிப்பு, ரெட்மி கே 20 மற்றும் ரெட்மி கே 20 ப்ரோ போன்ற முழுத்திரை சாதனங்களுக்கு பயனர் அனுபவத்தை மேம்படுத்துகிறது. மேலும், புதிய அலாரம் ரிங்டோன்கள் மற்றும் அறிவிப்பு ஒலிகள் மூலம் இயற்கையின் மென்மையான ஒலிகளை சியோமி வழங்கியுள்ளது. MIUI 11 புதுப்பிப்பு எப்போதும் அனுபவத்தையும் கொண்டுள்ளது.
MIUI 11 update-ஐ Download செய்வது எப்படி?
எதிர்பார்க்கப்படும் MIUI 11 update இந்தியாவில் Redmi K20-யில் வெளியிடத் தொடங்கியது. இந்த மாதத் தொடக்கத்தில் Redmi Note 8 சீரிஸ் வெளியீட்டு நிகழ்வில், Poco F1, Redmi K20, Redmi Y3, Redmi 7, Redmi Note 7, Redmi Note 7S மற்றும் Redmi Note 7 Pro ஆகியவற்றுக்கு MIUI 11 update-ஐ அக்டோபர் 22 மற்றும் அக்டோபர் 31-க்கு இடையே வெளியிடப்படும் என்று ஜியோமி அறிவித்தது. செவ்வாயன்று Redmi K20, update-ஐ பெற்ற முதல் போனாகும். Redmi K20 Pro, Redmi 6, Redmi 6 Pro, Redmi 6A, Redmi Note 5, Redmi Note 5 Pro, Redmi 5, Redmi 5A, Redmi Note 4, Redmi Y1, Redmi Y1 Lite, Redmi Y2, Redmi 4, Mi Mix 2 மற்றும் Mi Max 2 ஆகியவை நவம்பர் 4-12-க்கு இடையிலும், Redmi Note 6 Pro, Redmi 7A, Redmi 8, Redmi 8A மற்றும் Redmi Note 8 நவம்பர் 13-29 வரை கிடைக்கும். இறுதியாக டிசம்பர் 18-26-க்கு இடையில் Redmi Note 8 Pro-வில் இந்த அப்டேட் கிடைக்கும்.
Redmi K20-வில் Settings > About phone > System update-ற்குச் சென்று MIUI 11 update வருகையை சரிபார்க்கவும். update-ன் அளவு 766MB மற்றும் பென்பொருள் பதிப்பு MIUI v11.0.2.0.PFJINXM-ஐக் கொண்டுள்ளது. மேலும், செப்டம்பர் 2019-ல் MIUI 11 update உடன் Android security patch சேர்க்கப்படும்.
MIUI 11-ன் புதிய அமைப்புகள் மற்றும் மாற்றங்கள்:
always-on அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்ட MIUI 10-க்கு மேம்படுத்தலாக MIUI 11 கிடைக்கிறது. Dynamic Clock, Kaleidoscope effects மற்றும் custom codes போன்ற அம்சங்களை எப்போதும் lock screen-ல் வைக்கலாம். lock screen-க்கு ஒரு அறிவிப்பு ஒளி போன்ற அனுபவமும் உள்ளது. கூடுதலாக, personalised lock screen வைத்திருக்கும் பயனர்களுக்கு Wallpaper Carousel-ஐ இந்த அப்டேட் கொண்டு வருகிறது.
இயற்கையான ஒலிகள் மற்றும் அறிவிப்பு விளைவுகள், preloaded Mi Share செயலி மற்றும் preloaded File Manager செயலியில் ஒருங்கிணைக்கப்பட்ட all-new document viewer-யும் Xiaomi வழங்கியுள்ளது. இதேபோல், pre-installed Notes செயலி பயனர்கள் தங்கள் பணிகளை நிர்வகிக்கவும் திருத்தவும் அனுமதிக்கிறது.
Redmi K20-க்கான MIUI 11 அப்டேட்டில் பல்வேறு மேம்பாடுகள் மற்றும் மேம்படுத்தல்கள் உள்ளன. in-display fingerprint sensor மற்றும் user interface தொடர்பான மேம்படுத்தல்கள் உள்ளன என்பதை அதிகாரப்பூர்வ changelog உறுதிப்படுத்துகிறது. மேலும், கைரேகை ஐகானை பாதிக்கும் பிழைகளை, இந்த அப்டேட் சரிசெய்கிறது. புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆப் வால்ட் மற்றும் திரையில் ஸ்வைப் செய்வதன் மூலம் கூடுதல் shortcuts-ஐக் காணும் திறனும் உள்ளது.
auto brightness, screenshot gestures மற்றும் Reading mode-ஐ turn off செய்ய புதுப்பிக்கப்பட்ட Game Turbo அம்சத்தையும் ஜியோமி வழங்கியுள்ளது. Game Turbo அம்சத்தில் உள்ள toolbox, autoplay மற்றும் multiple data SIM cards இடையில் மாறுவதற்கும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்