எதிர்பார்ப்பை கிளப்பிய சியோமியின் 'எம்ஐ 9' இன்று ரிலீஸ்!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 20 பிப்ரவரி 2019 17:30 IST
ஹைலைட்ஸ்
  • குவால்கம் ஸ்னாப்டிராகன் 855 SoC அமைப்புடன் இந்த போன் வெளியாகுகிறது.
  • எம்ஐ9 ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமராக்களுடன் இன்று வெளியாகிறது!
  • எம்ஐ 8 ஸ்மார்ட்போனின் தொடர்சியாக எம்ஐ 9 இன்று அறிமுகம்!

இன்று காலை சரியாக 11.30 மணிக்கு இந்த போனின் அறிமுக விழா துவங்க உள்ளது

சியோமி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான 'எம்ஐ 9' ஸ்மார்ட்போனை பீஜிங்கில் இன்று அறிமுகம் செய்கிறது. எம் 8 ஸ்மார்ட்போனை தொடர்ந்து இந்த புதிய தயாரிப்பு வெளியாகிறது. எம்.ஐ 9 ஸ்மார்ட்போன் வெளியாகும் முன்னரே பல முக்கிய அம்சங்கள் மற்றும் தகவல்களை வெளியிடப்பட்டன.

அதன்படி வேகமாக செயல்படும் NFC சிப், சிறப்பு ஜிபிஎஸ் மற்றும் கூகுள் உதவியாளருக்கான பிரத்யேக பட்டன் போன்ற முக்கிய சிறப்பம்சங்கள் குறித்த தகவல் சில நாட்களுக்கு முன்னரே வெளியானது.

Advertisement

இன்று அறிமுகம் செய்யப்படும் சியோமி எம்ஐ 9 இந்தியாவில் காலையில் சுமார் 11.30 மணிக்கு லைவ் ஸ்ட்ரீம் தொடங்குகிறது. அந்நிறுவனத்தின் இணையத்தில் இந்த அறிமுக விழாவை நம்மால் பார்க்க முடியும். சீன மொழியில் முழு விழாவும் நடக்கவுள்ள நிலையில், ஆங்கிலத்தில் வசனங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. 

சியோமி நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களிலும் இந்தப் புதிய போனின் தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு முன்னர் சியோமி நிறுவனம் சார்பில் வெளியான தகவல்படி எம்ஐ 9 போனில் 1080 ஓலெட் திரை மற்றும் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட பதிவு செய்யும் தொழில்நுட்பம் ஆகியன இருப்பது தெரிந்தது.

Advertisement

குவல்கம் ஸ்னாப்டிராகன் 855SoC மற்றும் 3 பின்புற கேமராக்கள் மற்றும் 20 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இந்த போனின் சிறப்பை மேலும் கூட்டுகின்றது.

இது மட்டும்மல்லாமல், 6.4 இஞ்ச் திரையும், 3,500 mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை (Pie) ஆகியவையும் இந்த போனில் பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

அத்துடன் 8ஜிபி ரேம், 256 ஜிபி வரை சேமிப்பு வசதியை இந்த போன் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அதிகாரபூர்வமாக வெளியான விலைப் பட்டியலைப் பொறுத்தவரை ரூபாய் 34,700 வரை இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல எம்ஐ 9 எஃஸ்ப்லோர் வகை ஸ்மார்ட்போனும் ரூபாய் 52,700-க்கு இந்தியாவில் விற்பனை செய்யப்படலாம்.

Advertisement

 

மேலும் படிக்க வெளியாகுமா ரெட்மி நோட் 7 ப்ரோ?... தெரிந்துகோள்ள வேண்டிய தகவல்கள்!
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi Mi 9, Xiaomi Mi 9 specifications, Xiaomi

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.