ரெட்மி நோட் 7 அறிமுக விழாவில், ரெட்மி நோட் 7 ப்ரோ (48 மெகா பிக்செல் சோனி IMX586 சென்சார்) கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சியோமி நிறுவனம் சார்பாக வெளியான தகவல் படி இந்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
சரியான தேதி அறிவிக்கபடாத நிலையில் தற்போது 3சி சான்றிதழுக்காக வந்துள்ளதாகவும், விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்து ரெட்மி நிர்வாக இயக்குனர் லூ வேய்பிங் கூறுகையில், சியோமி எம்ஐ 9 வெளியானதுக்கு பிறகே ரெட்மி நோட் 7 ப்ரோ வெளியாக வாய்புள்ளதாக கூறினார்.
கடந்த மாதம் மாடல் எண்களான M1901F7C மற்றும் M1901F7BE 3சி சான்றுதழுக்கு வந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. சியோமி எம் 9 வரும் பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது வாடிக்கையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 7 போனுக்கு வந்துள்ள 4,000mAh மற்றும் ஸ்னாப்டிராகன் 675 SoC உடன் வெளியாக வாய்புள்ளது. பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட்போன் ரூபாய் 15,800க்கு விற்பனை செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்