சியோமி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான 'எம்ஐ 9' ஸ்மார்ட்போனை பீஜிங்கில் இன்று அறிமுகம் செய்கிறது. எம் 8 ஸ்மார்ட்போனை தொடர்ந்து இந்த புதிய தயாரிப்பு வெளியாகிறது. எம்.ஐ 9 ஸ்மார்ட்போன் வெளியாகும் முன்னரே பல முக்கிய அம்சங்கள் மற்றும் தகவல்களை வெளியிடப்பட்டன.
அதன்படி வேகமாக செயல்படும் NFC சிப், சிறப்பு ஜிபிஎஸ் மற்றும் கூகுள் உதவியாளருக்கான பிரத்யேக பட்டன் போன்ற முக்கிய சிறப்பம்சங்கள் குறித்த தகவல் சில நாட்களுக்கு முன்னரே வெளியானது.
இன்று அறிமுகம் செய்யப்படும் சியோமி எம்ஐ 9 இந்தியாவில் காலையில் சுமார் 11.30 மணிக்கு லைவ் ஸ்ட்ரீம் தொடங்குகிறது. அந்நிறுவனத்தின் இணையத்தில் இந்த அறிமுக விழாவை நம்மால் பார்க்க முடியும். சீன மொழியில் முழு விழாவும் நடக்கவுள்ள நிலையில், ஆங்கிலத்தில் வசனங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களிலும் இந்தப் புதிய போனின் தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு முன்னர் சியோமி நிறுவனம் சார்பில் வெளியான தகவல்படி எம்ஐ 9 போனில் 1080 ஓலெட் திரை மற்றும் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட பதிவு செய்யும் தொழில்நுட்பம் ஆகியன இருப்பது தெரிந்தது.
குவல்கம் ஸ்னாப்டிராகன் 855SoC மற்றும் 3 பின்புற கேமராக்கள் மற்றும் 20 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இந்த போனின் சிறப்பை மேலும் கூட்டுகின்றது.
இது மட்டும்மல்லாமல், 6.4 இஞ்ச் திரையும், 3,500 mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை (Pie) ஆகியவையும் இந்த போனில் பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் 8ஜிபி ரேம், 256 ஜிபி வரை சேமிப்பு வசதியை இந்த போன் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அதிகாரபூர்வமாக வெளியான விலைப் பட்டியலைப் பொறுத்தவரை ரூபாய் 34,700 வரை இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல எம்ஐ 9 எஃஸ்ப்லோர் வகை ஸ்மார்ட்போனும் ரூபாய் 52,700-க்கு இந்தியாவில் விற்பனை செய்யப்படலாம்.
மேலும் படிக்க : வெளியாகுமா ரெட்மி நோட் 7 ப்ரோ?... தெரிந்துகோள்ள வேண்டிய தகவல்கள்!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்