Photo Credit: Twitter / Xiaomi
சியோமி நிறுவனம், தனது ஸ்மார்ட்போன் குடும்பத்தில் மற்றொரு உறுப்பினரை அறிமுகப்படுத்தவுள்ளது. 'Mi 9' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள் ஒரு தொடராக விரைவில் அறிமுகமாகவுள்ளது. இது குறித்து அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது, சியோமி நிறுவனம். சியோமி நிறுவனத்தால் பகிரப்பட்டுள்ள அந்த படத்தில் 3 பின்புற கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனின் பெயர் என்னவாக இருக்கும் என்று வாடிக்கையாளர்கள் கூறலாம் என்றவாறு பதிவிடப்பட்டுள்ளது, இந்த புகைப்படும். பாப்-அப் செல்பி கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் என்று கூறியுள்ள சியோமி நிறுவனம், வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை.
இந்த ஸ்மார்ட்போன் 'Mi 9' தொடர் ஸ்மார்ட்போன் எனவும், 'Mi 9T' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், ஏற்கனவே தாய்வான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அங்கீகாரம் பெற்றுவிட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புது ஸ்மார்ட்போன் குறித்த தகவலை ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. பின்புறம் 3 கேமராக்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்ம, முன்புறம் முழுவதும் திரையை கொண்டுள்ளது. அதனால், எந்த ஒரு சந்தேகமுமின்றி இந்த ஸ்மார்ட்போன் பாப்-அப் செல்பி கேமரா கொண்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. மேலும் '#PopUpInStyle' என்ற ஹேஸ்டேக்கின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்னும் உறுதியாக அறிவிக்கப்படாத இந்த 'Mi 9T' ஸ்மார்ட்போன் ற்கனவே தாய்வான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் என்.பி.டி.சி சான்றிதழ் பெற்றுவிட்டது என்றவாறான தகவல்களும் வெளியாகியுள்ளன.
இந்த நிறுவனம், பல ஸ்மார்ட்போன்களை ரெட்மீ நிறுவனத்தின் பெயரில் வெளிட்டதற்கு பிறகு வெளியாகும் முதல் எம் ஐ ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்கதாக, இந்த மாதத்தில் மட்டும், இந்தியாவில் 'ரெட்மீ நோட் 7S' மற்றும் சீனாவில் 'ரெட்மீ K20' ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்