மொபைல் போன் சாப்டுவேர்களை மேம்படுத்தும் அதே நேரம், ஹார்டுவேர்களையும் முன்னேற்றம் செய்து கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனங்கள் உள்ளன.
Photo Credit: Courtesy of Light
பேப்பர் போன்று உங்கள் போனை மடக்கி வைக்க நினைத்துள்ளீர்களா? 9 லென்ஸ் கொண்ட கேமரா வேண்டுமா? எளிமையான வகையில் பேட்டரி சார்ஜ் செய்ய வேண்டுமா? இவை அனைத்தும் கூடிய வசதியில் உள்ள மொபைல் போன் தயாரிக்க , முன்னனி நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
சாம்சங் நிறுவனத்தில் காலெக்சி X பதிப்பு மடிய கூடிய வகையில் தயாரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தொழிநுட்ப வளர்ச்சியால், கூடிய விரைவில் மடங்கும் கிளாஸ் கொண்ட மொபைல் போன்கள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ஐபோன் 6 போன்களை அமெரிக்கர்கள் இன்றும் பயன்படுத்த காரணம், அதனை தொடர்ந்து வெளிவந்த ஐபோன் 8 போன் சிறப்பான செயற்பாட்டை வெளிப்படுத்தவில்லை.
மொபைல் போன் சாப்டுவேர்களை மேம்படுத்தும் அதே நேரம், ஹார்டுவேர்களையும் முன்னேற்றம் செய்து கொண்டே இருக்க வேண்டிய கட்டாயத்தில் மொபைல் போன் நிறுவனங்கள் உள்ளன. மொபைல் போன் ஸ்டைல், வடிவத்தை பொறுத்தே பெரும்பாலானோர் மொபைல் போன் வாங்குகின்றனர்.
சென்சார்கள்
குறிப்பாக மொபைல் போன்களில் வைக்கப்படும் சென்சார்கள் மிக நுட்பமான வகையில் வளர்ச்சி அடைந்துள்ளன. ஃபேஸ் ஸ்கிரீன் செண்சார், கைரேகை சென்சார்கள் மொபைல் போன் மாடலிற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு வருகிறது. குவால்காம் தயாரித்துள்ள தொழில்நுட்பம் மூலம், மெட்டல், தண்ணீருக்குள் போன்ற இடங்களிலும் ஃபின்கர் ப்ரிண்ட் சென்சார்கள் வேலை செய்யும் வசதியை
அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரையில், சீனா நிறுவனங்களான விவோ மற்றும் சையோமி போன்களில் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு வந்துள்ளன. ஆப்பிள் வாடிக்கையாளர்கள் பதற வேண்டாம், ஐபோனின் அடுத்த படைப்பில் இந்த வசதி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
கேமரா
மொபை போன்களில் ஐந்து முதல் ஒன்பது லென்ஸ்கள் கொண்டதாக வெளிவறும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்பது லென்ஸ்கள் கொண்ட மொபைல் போன், 64 மெகா பிக்சல் வரை புகைப்படம் எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர். குறைந்த வெளிசத்திலும், சிறப்பான புகைப்படங்கள் எடுக்கஉதவும். ஆனால், 16 லென்ஸ் கொண்ட காமராவின் விலை அதிகம், 1950 அமெரிக்க டாலர்! அதாவது 1.34 லட்சம் ரூபாய்!!
ஏற்கனவே, சாம்சங் ஆப்பிள் போன்களில் இரண்டு லென்ஸ்கள் கொண்ட கேமராக்கள் வெளியாகியுள்ளன. சிறப்பான ஜூம் வசதிகளுடன், தெளிவான புகைப்படங்களை எடுக்க இந்த லென்ஸ் பயன்படும். ஹூவாயில் முதன் முறையாக பி21 ப்ரோ ப்ளாக்சிப் மூலம் மூன்று லென்ஸ்கள் கொண்ட கேமராக்கள் தயாரிக்கப்படுகின்றன. கலர், மோனோக்ரோம், 3X ஜூம் கொண்ட வசதிகளுடன் தயாரிக்கப்பட உள்ளது.ஃபாக்ஸ்கான் நிறுவனம் மல்டி-லென்ஸ் கொண்ட ஸ்மார்ட் போன் வெளியீடு குறித்து இந்த ஆண்டு அறிவித்தது.
ஃபோல்டிங் போன்
ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்தும் அனைவரும், ஒரு முறையாவது போன் கிளாஸை உடைத்திருக்க வாய்ப்புள்ளது. உடையாத ஃபோல்டிங் போன் தயாரிக்க பல முன்னனி நிறுவனங்களும் போட்டி போட்டு வருகின்றனர்.
கடந்த பத்து ஆண்டுகளாக, ஃபோல்டிங் போன்கள் வெளியாக உள்ளது என செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எனினும், மக்கள் பயன்படுத்தும் வகையில் சிறப்பான ஃபோல்டிங் போன்கள் வெளியாகவில்லை. ஃபோல்டிங் வசதி கொண்ட ப்ளாஸ்டிக் போன்களால், நீண்ட நாட்களுக்கு. சாம்சங் நிறுவனம் உலகத்தின் முதல் ஃபோல்டிங் போனை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஃபோல்டிங் போன் வெளியிட இருப்பதாக சாம்சங் நிறுவனம் செய்தி வெளியிட்டது
குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு, 1,27 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையில் சாம்சங் காலெக்சி X போன் வெளிவரும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
![]()
பேட்டரி, பிற வசதிகள்
சிறப்பான பேட்டரி தருவது மொபைல் போன் நிறுவனங்களின் முக்கிய கடமை ஆகும். எளிமையான வழியில் பேட்டரி சார்ஜ் செய்யும் வசதிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி கொண்டு எளிமையான உபயோகத்தை கொண்டு வர ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.![]()
கணினி யுகத்தில், மாற்றங்கள் வந்து கொண்டே, வளர்ச்சியடைந்து கொண்டே
இருக்கின்றன
© The Washington Post 2018
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Z TriFold to Be Produced in Limited Quantities; Samsung Plans to Review Market Reception: Report
iPhone 18 Pro, iPhone 18 Pro Max Tipped to Sport 'Transparent' Rear Panel, Hole Punch Display Cutout