5.7 இன்ச் எச்.டி+ திரை கொண்ட இந்த போன், 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது.
எல்.ஜி நிறுவனம் நடுத்தர வாடிக்கையாளர்களை குறிவைத்து X4 (2019)-ஐ அறிமுகம் செய்துள்ளது. போன் மூலம் அதிகம் இசையை கேட்க விரும்புபவர்களுக்கு ஏற்றது போல் X4 வடிவமைக்கப்பட்டுள்ளது. X4-ல் இருக்கும் ஹை-ஃபை குவாட் டி.ஏ.சி சிறந்த இசையை கொடுக்கும். இதுவரை எல்.ஜி-யின் விலை உயர்ந்த போன்களுக்கு மட்டும்தான் இந்த சிறப்பு வசதி இருந்தது. தற்போது மிட் ரேஞ்ச் போனுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்ட X4 (2018)-ன் அடுத்த வெர்ஷனாக இந்த போன் வந்துள்ளது.
எல்.ஜி X4 (2019) விலை:
கொரியாவில் வெளியான எல்.ஜி K12+ போலவே இந்த X4 காணப்படுகிறது. அதே நேரத்தில் எல்.ஜி K40-யின் சிறப்பம்சங்களை இந்த போன் ஒத்திருக்கிறது. இரண்டு போனுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் ரேம் திறன்தான். X4-ல் 2 ஜிபி ரேம் இருக்கிறது. K40-யில் 3 ஜிபி ரேம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்.ஜி X4-ன் விலை 18,000 ரூபாய் இருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் இந்த போன் கொரிய சந்தையில் விற்பனைக்கு வரும். ஆனால், இந்தியாவில் இந்த போன் எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்து எல்.ஜி எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.
எல்.ஜி X4 (2019) சிறப்பம்சங்கள்:
நானோ டூயல் சிம் ஸ்லாட் கொண்ட இந்த போன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மூலம் இயங்குகிறது. 5.7 இன்ச் எச்.டி+ திரை கொண்ட இந்த போன், 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது. ஆக்டா-கோர் மீடியா டெக் ஹீலியோ P22 (MT6762) எஸ்.ஓ.சி மூலம் X4 பவரூட்டப்படுகிறது. 2 ஜிபி ரேம் சப்போர்ட்டுக்கு உள்ளது. ஆனால், இவை அனைத்தையும் விட இந்த போனின் அதிமுக்கிய வசதி, ஹை-ஃபை குவாட் டி.ஏ.சிதான். இந்த அம்சம்தான், போனில் இசை கேட்பதை மிகவும் ரம்மியமானதாக மாற்றும்.
கேமரா துறையைப் பொறுத்தவரை 16 மெகா பிக்சல் ரியர் கேமரா, 8 மெகா பிக்சல் திறன் கொண்ட செல்ஃபி கேமரா உள்ளிட்டவைகள் படம் பிடிக்க இருக்கின்றன. 32 ஜிபி சேமிப்பு வசதியை X4 பெற்றுள்ளது.
3,000 எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி X4 உடன் வருகிறது. மேலும் பின்புறம் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்