இப்படியொரு சிக்கலை எப்படி சமாளிக்க போகிறது Apple நிறுவனம்?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 7 நவம்பர் 2024 11:17 IST
ஹைலைட்ஸ்
  • iPhone 14 Plus செல்போன் வைத்திருப்பவர்களுக்கு Rear Camera சிக்கல் ஏற்பட்ட
  • iPhone 14 Pro, iPhone 14 Pro Max மாடல்களில் எந்த பாதிப்பும் இல்லை
  • தகுதியான ஐபோன் 14 பிளஸ் பயனாளர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி சர்வீஸ் செய்து

The rear camera issue affects some iPhone 14 Plus units manufactured between 2023 and 2024

Photo Credit: Apple

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது iPhone 14 Plus செல்போன் பற்றி தான்.


iPhone 14 Plus செல்போனில் Rear Camera Issue ஏற்பட்டுள்ளது. இதனை கூடுதல் கட்டணமின்றி சர்வீஸ் செய்து தர ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வரிசை எண்ணை நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் தங்கள் கைபேசி பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கலாம். இதற்கிடையில் ஐபோன் 14 பிளஸ் பின்புற கேமராவை பழுதுபார்ப்பதற்கு ஏற்கனவே பணம் செலுத்திய பயனர்கள் பணத்தைத் திரும்பப்பெற ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பின்பக்க கேமராக்களில் Preview காட்டாத சிக்கலால் ஐபோன் 14 பிளஸ் யூனிட்களில் சிறிய அளவில் பாதிப்பு இருப்பதை கண்டறிந்ததாக ஆப்பிள் நிறுவனம் அமைத்த ஆதரவுப் பக்கம் கூறுகிறது . ஏப்ரல் 10, 2023 மற்றும் ஏப்ரல் 28, 2024 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட iPhone 14 Plus செல்போன்கள் இதுபோல பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.


iPhone 14 Plus உரிமையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளதா மற்றும் கட்டணமின்றி இலவச சேவைக்கு தகுதியுடையதா என்பதைச் சரிபார்க்க நிறுவனத்தின் இணைய பக்கத்தில் தங்கள் வரிசை எண்ணை உள்ளிடலாம். இந்த சேவைத் திட்டம் முதன்முதலில் வாங்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே பாதிக்கப்பட்ட செல்போனை இலவசமாக சரி செய்ய முடியும் என ஆப்பிள் கூறுகிறது.


iPhone 14 Plus இல் வரிசை எண்ணைக் கண்டறிய, பயனர்கள் Setting உள்ளே சென்று General > About என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில் Serial Number என தெரியும். அதில் Copy shortcut என்கிற ஆப்ஷன் மூலம் அதனை எடுத்துக்கொள்ள வேண்டும். Apple's support page உள்ளே iPhone 14 Plus Service Program என இருக்கும். அதில் Serial Number பதிவிட்டால் உங்கள் செல்போன் இலவச சர்வீசுக்கு தகுதியானதா என அறியலாம்.


இலவச சேவைத் திட்டத்தை தவிர கூடுதல் பழுதுபார்ப்புகளுக்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஆப்பிள் கூறுகிறது. ஐபோன் 14 பிளஸ் பின்புற கேமராவைச் சேவை செய்ய ஏற்கனவே பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் பணத்தைத் திரும்பப் பெற ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2023ல் வாங்கிய iPhone 14 Plus ஆனது பாதிக்கப்பட்ட வரிசை எண் வரம்பில் இல்லை என்பதை Gadgets 360 குழுவினால் சரிபார்க்க முடிந்தது.


பின்புற கேமரா சர்வீஸ் செய்யப்படும் போது உடைந்த பின்புற கண்ணாடி பேனல் போன்ற சிக்கல் இருந்தால் அதற்கு கூடுதலாக பணம் செலுத்தினால் மட்டுமே கேமரா சரிசெய்து தரப்படும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Apple, iPhone 14 Plus, iPhone 14 Plus price
 ...மேலும்
        
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 15 வெளிவந்தாச்சு! அதிரடியான லுக் மற்றும் கேமரா லீக்! புது போன் வாங்க காத்திருந்தவங்களுக்கு ஒரு நல்ல செய்தி!
  2. பட்ஜெட் விலையில் பக்கா போன்! Poco M7 Plus 5G புதிய மாடல் வந்தாச்சு! பிக் பில்லியன் டேஸ்ல ரூ. 11,000-க்குள்ள வாங்கலாம்
  3. பட்ஜெட் விலையில் பவர்ஃபுல் போன்! Realme P3 Lite 5G இந்தியாவில் லான்ச்! விலை என்னன்னு தெரியுமா
  4. iPhone 17 ஆர்டர் பண்ணீட்டீங்களா? பெரிய ஷாக் காத்திருக்கு! விநியோகம் தாமதமாகும்னு ஆப்பிள் சொல்லுது
  5. ஐபோன் 14 வாங்க இதுதான் சரியான நேரம்! பிக் பில்லியன் டேஸ்ல ரூ. 40,000க்கும் குறைவான விலையில்
  6. நத்திங் ஃபேன்ஸ் ரெடியா? புது இயர் 3-ல ‘டாப் பட்டன்’ இருக்காம்! அது எதுக்குன்னு தெரியுமா
  7. விவோ ஃபேன்ஸ் வெய்ட்டிங் ஓவர்! X300 சீரிஸ் போன் லான்ச் தேதி லீக் ஆயிருக்கு
  8. பிக் பில்லியன் டேஸ் வருது! ஐபோன் வாங்க ஆசையா? பிளிப்கார்ட் கொடுக்கும் மெகா ஆபர்
  9. சாம்சங் கேலக்ஸி S26 ப்ரோவின் லீக் ஆன வடிவமைப்பு: புதிய கேமரா மற்றும் கலர் விவரங்கள் இதோ!
  10. ஒப்போ ரசிகர்களே ரெடியா? ஃபைண்ட் X9 சீரிஸ் போன் லான்ச் ஆகுறதுக்கு முன்னாடிய தகவல் வந்தாச்சு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.