ஆப்பிள் நிறுவனம் வியாழக்கிழமை தனது சிலிக்கான் வேலி வளாகத்தில் செப்டம்பர் 10ஆம் தேதி நிகழ்விற்கு அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளது, இந்த நிகழ்வில் புதிய தலைமுறை ஐபோன் ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குப்பேர்டினோ நகரில் அதன் தலைமையகத்தில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடக்கவுள்ள இந்த நிகழ்வில் முக்கியமாக இடம்பெறப்போகும் தயாரிப்புகள் பற்றிய சிறு சிறு தகவல்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், ஐபோன் 11 மாடல்கள் A13 சிப்புடன் வரும் என்று வதந்திகள் குறிப்பிடுகின்றன. எதிர்பார்க்கப்படும் மூன்று ஐபோன் மாடல்களில், இரண்டு OLED பேனலை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது, மூன்றாவது ஐபோன் LCD திரையை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக, கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்துக்கு முன்னதாக தன்னுடைய புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்துவதை ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாக கொண்டுள்ளது.
உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகும் இந்த புதிய "ஐபோன் 11" ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் சேவைகளை விற்பனை செய்வதில் முன்னுரிமை வழங்கும் என கூறப்படுகிறது.
புதிய ஐபோன்கள் மேம்பட்ட செயதிறன் சக்தி மற்றும் கேமரா திறன்கள் உள்ளிட்ட மேம்பாடுகளைப் பெற்றே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் வடிவம் பெறத் தொடங்கும் அதிவேக 5G தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளுக்கான மாற்றங்கள் எதுவும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
தலைமை நிர்வாகி டிம் குக் இந்த நிறுவனம் தனது , அணியக்கூடியவைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துதல், ஐபாட் மற்றும் மேக்கிலிருந்து வலுவான செயல்திறன் மற்றும் ஐபோன் போக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகிய வேவைகளால் "ஜூன் மாத காலாண்டில் எல்லா நேரத்திலும் இல்லாத அளவு மிகப்பெரிய வருவாயை பதிவுசெய்துள்ளது" என்றார்.
ஆனால், ஆப்பிளின் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக இருக்கும், ஐபோன் வருவாய் ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டை விட 12 சதவீதம் குறைந்து இந்த ஆண்டு 26 பில்லியன் டாலராக இருக்கிறது.
பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தை கடுமையாக போட்டித்தன்மையுடன் வளர்ந்துள்ளது. பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டியாளர்கள் பிரதான ஷாப்பிங் பருவத்தில் முன்னிலை பெற வேண்டுமென போட்டியிடுகின்றனர்.
கூகுள் பொதுவாக அதன் Android மென்பொருளால் இயக்கப்படும் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனத்திற்கான வீழ்ச்சி நிகழ்வை நடத்துகிறது.
சாம்சங் சமீபத்தில் பெரிய திரை கொண்ட புதிய தலைமுறை கேலக்சி நோட் ஸ்மார்ட்போன்களை (சுமார் 68,000 ரூபாய் விலை) அறிமுகப்படுத்தியது, மேலும் இது மைக்ரோசாப்ட் உடன் நெருக்கமாக செயல்படும் என்றும் அதன் சாதனங்களின் வரிசையில் சேவைகள் சிறப்பாக செயல்படும் என்றும் குறிப்பிட்டது.
கடந்த காலாண்டில் சுருங்கி வரும் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் தன் இடத்தை இழந்துள்ளது, மேலும் சீன போட்டியாளர்களால் இந்த தொழில்நுட்ப நிறுவனம் முதல் மூன்று விற்பனையாளர்கள் பட்டியலில் இருந்து தள்ளப்பட்டதாக ஒரு விற்பனை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
இந்த வாரம் IHS மார்க்கிட்டின் அறிக்கையின்படி, உலகளாவிய ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நான்காவது இடத்திற்கு சரிந்தது, இரண்டாவது காலாண்டில் 35.3 மில்லியன் ஐபோன்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது, ஒப்பிடும்போது ஒப்போ நிறுவனம் 36.2 மில்லியன் ஸ்மார்ட்போன் யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
தென்கொரிய நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் சந்தையில் 23 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது, 75.1 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது, சீனாவின் ஹவாய் 58.7 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து, சந்தையில் 18 சதவீதத்தை தன் வசம் வைத்துள்ளது.
பிற ஸ்மார்ட்போன் சந்தை கண்காணிப்பாளர்களான கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் மற்றும் இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன், இரண்டாம் காலாண்டில் ஐபோன் ஏற்றுமதி குறைந்துவிட்டாலும், ஆப்பிள் உலகளாவிய ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்