ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் மாடலான iPhone 16e, தற்போது ஆன்லைன் தளங்களில் மிகப்பெரிய விலைக்குறைப்பை சந்தித்துள்ளது
இந்தியாவில் ரூ.60,000க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள்: இந்தியாவில் விவோ X200T விலை ரூ.59,999 இல் தொடங்குகிறது (படம்)
இன்னைக்கு ஒரு தரமான ஆப்பிள் அப்டேட்டோட வந்திருக்கோம். ஐபோன் வாங்கணும்னு ஆசைப்படுற பல பேருக்கு பட்ஜெட் ஒரு பெரிய தடையா இருக்கும். ஆனா, இப்போ அந்த கவலையே வேண்டாம். ஏன்னா, ஆப்பிளோட லேட்டஸ்ட் பட்ஜெட் ஐபோனான iPhone 16e-யோட விலை இப்போ அதிரடியா குறைஞ்சிருக்கு. அதுவும் 1000, 2000 இல்ல.. மொத்தமா ரூ.11,500 வரை லாபம் பார்க்கலாம்னு சொன்னா நம்புவீங்களா? வாங்க, அந்த டீல் என்ன, எப்படி வாங்கணும்னு விரிவா பார்ப்போம்.
தற்போது இந்த அதிரடி விலைக்குறைப்பு Vijay Sales மற்றும் Croma போன்ற முன்னணி ரீடைல் தளங்களில் கிடைக்கிறது. பொதுவாக ரூ.59,900-க்கு அறிமுகமான இந்த iPhone 16e (128GB), தற்போது விற்பனை தளங்களில் நேரடித் தள்ளுபடியாக (Flat Discount) ரூ.51,490 அல்லது அதற்கும் குறைவாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது ஆரம்பத்திலேயே உங்களுக்கு ரூ.8,000 வரை லாபம் கிடைக்கிறது.
நேரடித் தள்ளுபடி போக, உங்ககிட்ட ICICI அல்லது Axis வங்கி கிரெடிட் கார்டுகள் இருந்தா இன்னும் கொண்டாட்டம்தான். இந்த கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும்போது கூடுதலாக ரூ.3,500 முதல் ரூ.4,000 வரை உடனடித் தள்ளுபடி (Instant Cashback) கிடைக்கிறது. இதையெல்லாம் கணக்குப்போட்டுப் பார்த்தா, போனோட எஃபெக்டிவ் விலை சுமார் ரூ.47,990-க்கு வந்துடுது. ஒரு லேட்டஸ்ட் ஐபோன் ரூ.50,000-க்கு உள்ள கிடைக்குதுன்னா இது நிஜமாவே செம டீல்தானே.
"விலை கம்மியா இருக்கே, இது நல்லா இருக்குமா?" அப்படின்னு யோசிக்காதீங்க. இதுல ஆப்பிளோட லேட்டஸ்ட் A18 சிப்செட் இருக்கு. இதனால பர்பார்மன்ஸ் வேற லெவல்ல இருக்கும். முக்கியமா, சாம்சங் மற்றும் கூகுள் போன்களுக்கு போட்டியா ஆப்பிள் கொண்டு வந்திருக்க Apple Intelligence (AI) வசதிகளை இது சப்போர்ட் பண்ணும். 48MP மெயின் கேமரா, செராமிக் ஷீல்டு பாதுகாப்புன்னு ஒரு ஃபிளாக்ஷிப் போனுக்கான எல்லா அம்சங்களும் இதுல இருக்கு.
கண்டிப்பா இருக்கு! உங்ககிட்ட பழைய ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு போன் இருந்தா, அதை எக்ஸ்சேஞ்ச் பண்ணி இன்னும் கூடுதலான தள்ளுபடியைப் பெறலாம். போனோட கண்டிஷனைப் பொறுத்து ரூ.20,000 வரை கூட தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு இருக்கு. அப்படிப் பார்த்தா, நீங்க வெறும் ரூ.30,000-க்கும் இந்த போனைத் தூக்கலாம்.
யாரெல்லாம் ஐபோன் 11, 12-ல இருந்து அப்கிரேட் பண்ண நினைக்கிறீங்களோ, அவங்களுக்கு இதுதான் சரியான நேரம். பட்ஜெட்ல ஒரு AI போன் வேணும்னு நினைக்கிறவங்களுக்கு iPhone 16e ஒரு வரப்பிரசாதம். இந்த ஆஃபர் ஸ்டாக் இருக்குற வரைக்கும் தான் இருக்கும், சோ சீக்கிரம் செக் பண்ணிப் பாருங்க. இந்த டீல் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? "இதுக்கு மேலயும் வெயிட் பண்ணலாமா இல்ல இப்போவே வாங்கிடலாமா?" உங்களோட கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Laptops to Open for Pre-Orders on September 21, Google Confirms