எச்டிசியின் முதல் 5ஜி போன் இந்த ஆண்டு வெளியாகிறது! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 24 பிப்ரவரி 2020 13:06 IST
ஹைலைட்ஸ்
  • எச்டிசி தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனை 2020-ல் அறிமுகப்படுத்தவுள்ளது
  • இப்போதைக்கு அதற்கான விவரக்குறிப்புகள் எதுவும் இல்லை
  • எச்டிசி அதன் மெய்நிகர் & augmented ரியாலிட்டி செயலிகளிலும் செயல்படும்

எச்டிசியின் 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வருகிறது

எச்டிசி இந்த ஆண்டு 5ஜி போனை வெளியிடும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யவ்ஸ் மைத்ரே (Yves Maitre) தெரிவித்தார். ஒரு நேர்காணலில், எச்டிசி, 5 ஜி இணைக்கப்பட்ட செயலிகள் பிரிவில் அதிக முதலீடு செய்யும் என்றும், தைவான் சந்தையில் பல வளர்ச்சி வாய்ப்புகளைப் பார்க்கிறது என்றும் அவர் பகிர்ந்து கொண்டார். இப்போதைக்கு, போனின் விவரக்குறிப்புகள் அல்லது அது எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்த விவரங்கள் எதுவும் இல்லை, ஆனால் இதை சாத்தியமாக்குவதற்கு எச்டிசி குவால்காமுடன் இணைந்து செயல்படும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மஷ்திகியின் (Mashdigi) அறிக்கையின்படி, 5ஜி போனின் திட்டங்கள் என்னவாக இருக்கும் என்பதை யவ்ஸ் (Yves) தெளிவுபடுத்தவில்லை, எனவே நிறுவனம் ஒரு mid-tier 5ஜி ஸ்மார்ட்போன் அல்லது பல சாதனங்களை வெவ்வேறு விலை பிரிவுகளில் அறிமுகப்படுத்துமா என்பது நிச்சயமற்றது.

ஒரு வருடத்திற்கு முன்பு, 5ஜி நெட்வொர்க் சந்தையில் சேர அமெரிக்க வயர்லெஸ் ஆபரேட்டர் ஸ்பிரிண்ட்டுடன் எச்டிசி பணியாற்றியது, அதன் பின்னர் அதன் 5ஜி hub-ஐ வெளியிட்டது.

5ஜி மூலம் இயக்கப்படும் மெய்நிகர் பார்வை கண்டெண்டிலும் HTC முதலீடு செய்கிறது. எச்டிசி விவ் காஸ்மோஸ் தொடர் மற்றும் எச்டிசி விவ் தொடர்கள் தொடர்பாக தற்போதைய மெய்நிகர் பார்வை செயலிகளில் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது. அதனுடன், அதன் augmented reality செயலிகளிலும் இது செயல்படும்.  augmented reality செயலிக்கு வரும்போது வளர்ச்சிக்கு இன்னும் இடமுண்டு என்று நிறுவனம் நம்புகிறது, எனவே இது தொடர்புடைய செயலிகளின் புதிய வெளியீடுகளுடன் அதன் நேரத்தை எடுக்கும்.

மார்ச் 16-ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவிருக்கும் கேம் டெவலப்பர்கள் மாநாடு (Game Developers Conference - GDC) 2020-ல் எச்டிசி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விவ் பிரிவு மார்ச் 17-ஆம் தேதி Vive Developer Summit-ஐ நடத்துகிறது. HTC Vive Cosmos Elite, Vive Sync, HTC Vive Cosmos Play மற்றும் HTC Vive Cosmos XR ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு, இந்த நிறுவனம், Sony மற்றும் Facebook போலல்லாமல் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் என்று தெரிகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: HTC, Yves Maitre, 5G
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ₹43,000-க்கு புது Nothing போன்! Phone 4a Pro-ல eSIM சப்போர்ட், புது பிங்க் கலர்! ஆடியோவுல 'Headphone a' வருது
  2. WhatsApp-ல இனி Missed Call வந்தா Voice Message அனுப்பலாம்! புது ஆப்ஷன் வந்துருச்சு! நீங்க ட்ரை பண்ணீங்களா?
  3. WhatsApp-ல இனி Missed Call வந்தா Voice Message அனுப்பலாம்! புது ஆப்ஷன் வந்துருச்சு! நீங்க ட்ரை பண்ணீங்களா?
  4. 45W-க்கு இனி டாட்டா! Galaxy S26 Ultra-ல் 60W சார்ஜிங் வருது! Wireless-ல 25W! சாம்சங் ஃபேன்ஸ் இதைத்தான் கேட்டாங்க
  5. புது Foldable போன்! Huawei Mate X7: 88W சார்ஜிங், 5x ஆப்டிகல் ஜூம்! இந்தியால வருமா?
  6. AI-ல அடுத்த புரட்சி! GPT-5.2-ல என்னென்ன இருக்குன்னு பாருங்க! இமேஜை பார்த்து முடிவெடுக்கும் AI
  7. Oppo Reno 15C வருது! 64MP கேமரா, 100W சார்ஜிங்! இந்த Reno சீரிஸ் மாடல் இந்திய மார்க்கெட்டை கலக்குமா?
  8. Galaxy S26: கேமரா அப்கிரேட் ரத்து; விலை கட்டுக்குள் வைக்க Samsung திட்டம்
  9. புது போன் வாங்க வெயிட் பண்ணுங்க! Realme 16 Pro+ வருது! பெரிஸ்கோப் கேமரா, 7000mAh பேட்டரி: வேற லெவல் டீஸ்
  10. Realme Narzo 90 Series: 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே உடன் லான்ச்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.