இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை தொடரும் என அறிவித்துள்ளது ஹச்டிசி

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை தொடரும் என அறிவித்துள்ளது ஹச்டிசி

கடந்த மாதம் ஹச்டிசி நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய டிசையர் 12 மற்றும் டிசையர் 12+ ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையான இந்தியாவில் தன்னுடைய செயல்பாடுகளை அந்நிறுவனம் நிறுத்தப்போவதாக வருகிற தகவல்களுக்கு எந்த ஒரு சமிக்ஞையும் அளிக்கவில்லை. எனினும் ஹச்டிசி இந்தியாவின் தலைமை நிர்வாகிகள் பலரும் விலகியதாக கூறப்படுவதோடு, அந்நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய விற்பனையை நிறுத்திக்கொள்ளப்போவதாக சில காலமாகவே தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்நிறுவனம் தன்னுடைய பணியாளர் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்தியிருந்தாலும், இந்தியாவில் தொடர்ந்து தன்னுடைய ஸ்மார்ட்போன்களை விற்பதற்கு முனைப்பு காட்டிவருவதை கேட்ஜட்ஸ் 360 அறிந்துள்ளது.

ஹச்டிசி நிறுவனம் தன்னுடைய பணியாளர் எண்ணிக்கையை இந்திய சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக ஒழுங்குபடுத்திவருவதை உறுதி செய்துள்ளது. எனினும் அது தன்னுடைய ஸ்மார்ட்போன் விற்பனையை நிறுத்துவதில் எந்தவொரு முனைப்பும் காட்டவில்லை. "ஹச்டிசி நிறுவனம் இந்தியாவில் அதன் பிரபலமான ஸ்மார்ட்ஃபோன்களை தொடர்ந்து விற்பனை செய்யும்; உண்மையில், நாங்கள் தற்போது தான் இந்தியா சந்தையில் ஹச்டிசி டிசையர் 12 மற்றும் ஹச்டிசி டிசையர் 12+ ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். ஹச்டிசி எப்போதும் செயல்பாட்டில் புதிய செயல்திறனைத் தேடுகிறது, மேலும் சரியாக சந்தை விற்பனையை உறுதி செய்ய தயாரிப்பு உத்திகளை முறையாக ஆராய்ந்து வருகிறோம்" என அந்நிறுவனம் கேட்ஜெட்ஸ் 360யிடம் தெரிவித்துள்ளது.

பல ஊழியர்கள் வேலையை விட்டு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தாலும், பத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்போதும் தொடர்ந்து ஹச்டிசியில் வேலை செய்துவருவதை அந்நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது. மேலும் அந்நிறுவனம் சமீபத்தில் தாய்வான் தயாரிப்பு பிரிவிலிருந்து 1,500 ஊழியர்களை வேலையை விட்டு செல்ல அனுமதித்திருக்கிறது. "ஹச்டிசி சமீபத்தில் இந்த பிராந்தியத்தில் உள்ள வணிகங்களை பொதுவான தலைமையின் கீழ் கொண்டு வர நிறுவனத்தை ஒழுங்குபடுத்தியிருக்கிறது. மற்றும் அதன் முக்கிய நடவடிக்கைகளுக்கு எதிராக வளங்களை மறுசீரமைத்து வருகிறது. இந்திய அலுவலகத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட பணியாட்கள் குறைப்பு, உள்ளூர் மற்றும் பிராந்திய சந்தை நிலைமையை மேலும் சரியாக பிரதிபலிப்பதற்கு ஏதுவாக செய்யப்பட்டுள்ளது, மற்றும் இது ஹச்டிசி நிறுவனத்தை புதிய கட்ட வளர்ச்சி மற்றும் புதுமைகளுக்கு இன்னம் திறம்பட முன்னேற உதவும். தற்போதும் இந்திய அலுவலகத்தில் பத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் முழு செயல்பாடை தொடர்ந்து வருகின்றனர்." என ஹச்டிசி தெரிவித்துள்ளது.

மேலும் "ஹச்டிசி நிறுவனத்திற்கு முக்கியமான சந்தையாக இருப்பதால், நாங்கள் இந்தியாவில் தொடர்ந்து சரியான நேரத்தில், சரியான பிரிவில் முதலீடு செய்து வருவோம். நாங்கள் எங்களுடைய வாடிக்கையாளர் விநியோக பங்காளர்களை மதிக்கிறோம் மற்றும் நாங்கள் இணைந்து பிரகாசமான எதிர்காலத்தை பெறுவோம். மேலும் முதன்மையின் முன்னோடியாக நாங்கள் எதிர்கால வளர்ச்சிக்குரிய துறைகளில் திறமைகளை தொடர்ந்து தேடுவோம்" எனக் கூறியுள்ளது.

எகனாமிக் டைம்ஸ் அறிக்கை ஒன்று ஹச்டிசி மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இடையேயான உறவு நல்ல நிலையில் இல்லையென்றும், விநியோகஸ்தர்கள் செலுத்தப்படாத நிலுவைத் தொகைகள் மற்றும் இதர பிரச்சனைகளின் காரணமாக சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் கேட்ஜெட்ஸ் 360-யிடம் அறிக்கையின் மூலம் தெரிவித்திருப்பதாவது, "ஹச்டிசி நிறுவனம் வரவிருக்கும் வழக்குப் பிரச்சனைகள் பற்றி அறிந்துள்ளது. ஆனால் மேற்கொண்டு கருத்து தெரிவிப்பதற்கு முன்பாக முழு விவரங்களையும் எதிர்பார்க்கிறது. நாங்கள் வாடிக்கையாளர்களுக்கும், வணிகத்திற்கும் எந்தவொரு இடையூறும் ஏற்படாததை உறுதிசெய்ய நாங்கள் எங்களின் சப்ளையர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அதிகாரப்பூர்வ புகாரி பெற்றதன் பிறகு, ஹச்டிசி நிறுவனம் தன்னுடைய உரிமைகளை பாதுகாக்க அனைத்து சட்ட வாய்ப்புகளைப் பற்றியும் பரிசீலிக்கும்" என்றுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் ஹச்டிசி இந்தியாவில் தன்னுடைய 70 முதல் 80 ஊழியர்களை பணியிலிருந்து விலக கேட்டிருப்பதாகவும், கடந்த ஓராண்டிற்கும் மேலாக உள்ளூர் தயாரிப்பை நிறுத்தி வைத்திருப்பதை தொடர்ந்து, அந்நிறுவனம் அனைத்து விநியோக ஒப்பந்தங்களையும் முறிப்பதாகவும் அந்த நிறுவனத்தில் உள்ள நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நிர்வாகிகள் ஹச்டிசி இந்தியாவில் தொடர்ந்து மெய்நிகர் சாதனங்களை மட்டும் இணையத்தில் விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், தாய்வான் குழு மட்டுமே இனி நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
  1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
  2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
  3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
  4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
  5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
  6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
  7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
  8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
  9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
  10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2021. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com