இந்தியாவில் அறிமுகமாகிறது எச்.டி.சி-யின் புதிய ஸ்மார்ட்போன்!

இந்த நிறுவனம் வைல்ட்-பயர் (Wildfire) என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம்

இந்தியாவில் அறிமுகமாகிறது எச்.டி.சி-யின் புதிய ஸ்மார்ட்போன்!

எச்.டி.சி டிசயர் 19+ ஸ்மார்ட்போன் ஜூன் மாதத்தில் தாய்வானில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஹைலைட்ஸ்
  • ஃப்ளிப்கார்ட் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை உறுதி செய்தது
  • எச்.டி.சி இந்த புதிய ஸ்மார்ட்போன் குறித்த டீசரை வெளியிட்டிருந்தது
  • டிசயர் 19+, வைல்ட்-பயர் என இரண்டு போன்கள் இந்த போட்டியில் உள்ளன
விளம்பரம்

முன்னதாக எச்.டி.சி நிறுவனம், தனது புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறிய ஒரு நாளிலேயே, ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 14 (புதன்கிழமை) வெளியாகும் என அறிவித்துள்ளது. ஃப்ளிப்கார்ட் மொபைல் செயலியில், இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை அறிவிப்பதற்காக பிரத்யேகமாக ஒரு பக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் தாய்வானில் அறிமுகமான 'டிசயர் 19+' (Desire 19+) ஸ்மார்ட்போனாக இந்த புதிய ஸ்மார்ட்போன் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃப்ளிப்கார்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனிற்கான பிரத்யேக பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் வாட்டர்-ட்ராப் நாட்ச் திரையை கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த பக்கத்தில் எச்.டி.சி-யின் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய எந்த தகவலும் பெரிதாக இடம்பெறவில்லை. எச்.டி.சி நிறுவனத்தின் மொபைல் வளர்ச்சி எப்படி இருந்தது என்பதை அந்த பக்கம் விவரிக்கிறது. கடந்த திங்கட்கிழமை வெளியான டீசர் வீடியோவிலும் இதுவே இடம் பெற்றிருந்தது. அந்த பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் வாட்டர்-ட்ராப் நாட்ச் திரையை கொண்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பக்கத்தின் கீழ் பகுதியில் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி குறிப்பிடப்படடுள்ளது.

htc new phone india launch flipkart app gadgets 360 HTC

எச்.டி.சி டிசயர் 19+ ஸ்மார்ட்போன், முன்னதாக இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் தாய்வானில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய சந்தையில் தான் இழந்த இடத்தை இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தால் மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனினும் GSMArena-வின் தகவல்படி, இந்த நிறுவனம் வைல்ட்-பயர் (Wildfire) என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் எனக் கூறியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. அந்த தகவல்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் HD+ (720x1520 பிகசல்கள்) திரையை கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. முன்புறத்தில் வாட்டர்-ட்ராப் நாட்ச் கேமராவுடன், 19:9 திரை விகிதத்தினாலான திரையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டு பின்புற கேமராக்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டிருக்கலாம். மீடியாடெக் ஹீலியோ P23 எஸ் ஓ சி ப்ராசஸர், 3,500mAh பேட்டரி ஆகிய சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »