ஒற்றை 5ஜி போன் அல்லது பல போன்களை வெளியிடுவதா என்பது குறித்து எச்டிசியின் தலைமை நிர்வாக அதிகாரி யவ்ஸ் மைத்ரே தெளிவுபடுத்தவில்லை.
எச்டிசியின் 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வருகிறது
எச்டிசி இந்த ஆண்டு 5ஜி போனை வெளியிடும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யவ்ஸ் மைத்ரே (Yves Maitre) தெரிவித்தார். ஒரு நேர்காணலில், எச்டிசி, 5 ஜி இணைக்கப்பட்ட செயலிகள் பிரிவில் அதிக முதலீடு செய்யும் என்றும், தைவான் சந்தையில் பல வளர்ச்சி வாய்ப்புகளைப் பார்க்கிறது என்றும் அவர் பகிர்ந்து கொண்டார். இப்போதைக்கு, போனின் விவரக்குறிப்புகள் அல்லது அது எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்த விவரங்கள் எதுவும் இல்லை, ஆனால் இதை சாத்தியமாக்குவதற்கு எச்டிசி குவால்காமுடன் இணைந்து செயல்படும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மஷ்திகியின் (Mashdigi) அறிக்கையின்படி, 5ஜி போனின் திட்டங்கள் என்னவாக இருக்கும் என்பதை யவ்ஸ் (Yves) தெளிவுபடுத்தவில்லை, எனவே நிறுவனம் ஒரு mid-tier 5ஜி ஸ்மார்ட்போன் அல்லது பல சாதனங்களை வெவ்வேறு விலை பிரிவுகளில் அறிமுகப்படுத்துமா என்பது நிச்சயமற்றது.
ஒரு வருடத்திற்கு முன்பு, 5ஜி நெட்வொர்க் சந்தையில் சேர அமெரிக்க வயர்லெஸ் ஆபரேட்டர் ஸ்பிரிண்ட்டுடன் எச்டிசி பணியாற்றியது, அதன் பின்னர் அதன் 5ஜி hub-ஐ வெளியிட்டது.
5ஜி மூலம் இயக்கப்படும் மெய்நிகர் பார்வை கண்டெண்டிலும் HTC முதலீடு செய்கிறது. எச்டிசி விவ் காஸ்மோஸ் தொடர் மற்றும் எச்டிசி விவ் தொடர்கள் தொடர்பாக தற்போதைய மெய்நிகர் பார்வை செயலிகளில் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது. அதனுடன், அதன் augmented reality செயலிகளிலும் இது செயல்படும். augmented reality செயலிக்கு வரும்போது வளர்ச்சிக்கு இன்னும் இடமுண்டு என்று நிறுவனம் நம்புகிறது, எனவே இது தொடர்புடைய செயலிகளின் புதிய வெளியீடுகளுடன் அதன் நேரத்தை எடுக்கும்.
மார்ச் 16-ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவிருக்கும் கேம் டெவலப்பர்கள் மாநாடு (Game Developers Conference - GDC) 2020-ல் எச்டிசி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விவ் பிரிவு மார்ச் 17-ஆம் தேதி Vive Developer Summit-ஐ நடத்துகிறது. HTC Vive Cosmos Elite, Vive Sync, HTC Vive Cosmos Play மற்றும் HTC Vive Cosmos XR ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு, இந்த நிறுவனம், Sony மற்றும் Facebook போலல்லாமல் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் என்று தெரிகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket