Photo Credit: Honor
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Honor X9c Smart செல்போன் பற்றி தான்.
Honor X9c Smart மலேசியாவில் வெளியிடப்பட்டது. இது MediaTek DImensity 7025 Ultra சிப்செட் மூலம் இயங்குகிறது. 8GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 108-மெகாபிக்சல் பிரதான பின்புற கேமராவை கொண்டுள்ளது. வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடன் 5,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. அல்ட்ரா-பவுன்ஸ் ஆண்டி டிராப் தொழில்நுட்பம் மற்றும் கீறல் எதிர்ப்பு டெக்னாலஜியுடன் வருகிறது. இது ஒரு மேஜிக் கேப்சூல் அம்சத்தைக் கொண்டுள்ளது. இது ஐபோனில் உள்ள ஆப்பிளின் டைனமிக் ஐலேண்ட் அம்சத்தைப் போன்ற மடிக்கக்கூடிய அம்சமாகும்.
கேமராவை பொறுத்தவரையில் Honor X9c Smart ஆனது f/1.75 துளை மற்றும் 3x ஜூம் கொண்ட 108-மெகாபிக்சல் பிரதான பின்புற கேமரா சென்சார் கேமராவை கொண்டுள்ளது. 16 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் கேமராவும் உள்ளது. இது AI-ஆதரவு இமேஜிங் மற்றும் எடிட்டிங் கருவிகளை கொண்டுள்ளது.
Honor X9c Smart செல்போனில் 35W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,800mAh பேட்டரி இருக்கிறது. இணைப்பு விருப்பங்களில் இரட்டை 5G, 4G LTE, Wi-Fi, ப்ளூடூத் 5.3, OTG, NFC, GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை உள்ளது. கீறல்-எதிர்ப்பு கட்டமைப்புடன் வருவதாகக் கூறப்படுகிறது. இது உராய்வு ஆய்வின் போது 3,000 சுழற்சிகளைத் தாங்கும் என்று கூறப்படுகிறது. 193 கிராம் எடை கொண்டது.
குறிப்பிடத்தக்க வகையில், Honor X9c ஆனது தூசி மற்றும் 360 டிகிரி நீர் எதிர்ப்பிற்கான IP65M- மதிப்பிடப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் Honor X9c Smart ஆனது "தொழில்ரீதியாக நீர் எதிர்ப்புத் திறன் கொண்டதாக இல்லை" என்று அதிகாரப்பூர்வ பட்டியல் உறுதிப்படுத்தியுள்ளது.
X9c ஸ்மார்ட் செல்போனின் விலை விவரங்களை ஹானர் இன்னும் அறிவிக்கவில்லை. இது Honor Malaysia இணையதளத்தில் 8GB + 256GB மாடல் பட்டியலிடப்பட்டுள்ளது . மூன்லைட் ஒயிட் மற்றும் ஓஷன் சியான் வண்ணங்களில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது.
6.78-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே உடன் ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,224 x 2,700 பிக்சல்ஸ், 850 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. MagicOS 8.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ஹானர் எக்ஸ்9சி ஸ்மார்ட் 5ஜி ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்