ஹானர் நிறுவனத்தின் ஹானர் 9 ஏ, ஹானர் 9 சி, மற்றும் ஹானர் 9 எஸ் ஆகிய மூன்று பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. இந்த மூன்று ஹானர் போன்களும் ஒற்றை ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகின்றன. போன்கள் ஹானர் ரஷ்யா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், அவை மே 4-ந் தேதி விற்பனைக்கு வரும்.
போனின் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை RUB 12,990 (இந்திய மதிப்பில் ரூ.13,300) ஆகும். இந்த போன் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
போனின் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை RUB 10,990 (இந்திய மதிப்பில் ரூ.11,300) ஆகும். இந்த போன் நீலம், பச்சை மற்றும் 'தி பிளாக்' ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளன.
போனின் 2 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை RUB 6,990 (இந்திய மதிப்பில் ரூ.7,200) ஆகும். இந்த போன் நீலம், சிவப்பு மற்றும் 'தி பிளாக்' கலர் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளன.
இந்த போன் Android 9 உடன் EMUI 10.1.1-ல் இயக்குகிறது. இது 6.20 அங்குல திரை 720x1,560 பிக்சல்கள் தெளிவுதிறன் மற்றும் 269ppi பிக்சல் அடர்த்தி கொண்டது. இந்த போன் ஆக்டா கோர் கிரின் 710A SoC-யால் இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் வருகிறது.
இந்த போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்புறத்தில், 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இது ஹோல்-பஞ்ச் வடிவமைப்பில் வைக்கப்பட்டுள்ளது.
Honor 9C, 64 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் வருகிறது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். இந்த போன் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 176 கிராம் எடையுடன் 159.81x76.13x8.13 மிமீ அளவில் உள்ளது.
இந்த போன் ஆண்ட்ராய்டு 10 உடன் மேஜிக் யுஐ 3.1-ல் இயக்குகிறது. இது 6.3 அங்குல திரை 720x1,600 பிக்சல்கள் தெளிவுதிறன் மற்றும் 278 பிபி பிக்சல் அடர்த்தி கொண்டது. இந்த போன் ஆக்டா கோர் மீடியாடெக் MT6762R SoC-யால் இயக்கப்படுகிறது. இது ஒற்றை 3 ஜிபி ரேம் ஆப்ஷனில் வருகிறது.
இந்த போன் 13 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. இதனுடன் 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் ஷூட்டர் ஆகியவையும் உள்ளது. செல்ஃபிக்களுக்கு, 8 மெகாபிக்சல் ஷூட்டர் நாட்சில் வைக்கப்பட்டுள்ளது.
Honor 9A, 64 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் வருகிறது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். இந்த போன் ஒரு பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 159.07x74.06x9.04 மிமீ அளவுடன் 185 கிராம் எடையைக் கொண்டதாகும்.
இந்த போன் ஆண்ட்ராய்டு 10 உடன் மேஜிக் யுஐ 3.1-ல் இயக்குகிறது. இது சிறிய 5.45 அங்குல திரை 720x1,440 பிக்சல்கள் தெளிவுதிறன் மற்றும் 295.4 பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்டது. இது ஆக்டா கோர் மீடியாடெக் MT6762R SoC-யால் இயக்கப்படுகிறது. இது ஒற்றை 2 ஜிபி ரேம் ஆப்ஷனில் வருகிறது.
இந்த போன் ஒரே 8 மெகாபிக்சல் ஷூட்டரைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் ஷூட்டர் உள்ளது. முன் கேமரா மேலே தடிமனான பெசல்கள் வைக்கப்பட்டுள்ளது.
Honor 9S, 32 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் வருகிறது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். இது 3,020 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 146.5x70.94x8.35 மிமீ அளவையும் 144 கிராம் எடையும் கொண்டது.
இந்த மூன்று Honor போன்களிலும் இணைப்பிற்காக, வைஃபை 802.11 பி / ஜி / என், 4 ஜி எல்டிஇ, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் மற்றும் சார்ஜ் செய்ய மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்