ஹானர் 30 சீரிஸின் முதல் போன் ஹானர் 30 எஸ் அறிமுகமாகியுள்ளது. ஹவாய் நிறுவனத்தின் புதிய கிரின் 820 5ஜி சிப்செட் பொருத்தப்பட்ட முதல் போன் இதுவாகும். குறிப்பாக, இந்த போன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. ஆனால், ஹவாய் மொபைல் சர்வீசஸ் (எச்எம்எஸ்) கோரை என்பதால், 'பிளே ஸ்டோர்' போன்ற கூகுள் சேவைகளுக்கு அணுகல் இல்லை.
Honor 30S-ன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 2,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.25,500)-யாகவும், டாப்-எண்ட் 8 ஜிபி + 256 ஜிபி பதிப்பு சிஎன்ஒய் 2,699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,000)-யாகவும் உள்ளது. இந்த் போன் ஏப்ரல் 7 முதல் விற்பனைக்கு வரும். இந்த போன் கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
Honor 30 எஸ், டூயல்-சிம் (நானோ) ஸ்டாட்டைக் கொண்டுள்ளது. இந்த போன், மேஜிக் யுஐ 3.1.1 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இது 6.5 அங்குல முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டது. போனில் புதிய கிரின் 820 5ஜி சில்லு உள்ளது. இந்த போன் 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேமைக் கொண்டுள்ளது.
ஹானர் 30 எஸ்-ன் கேமரா அமைப்பில், எஃப் / 1.8 aperture உடன் 64 மெகாபிக்சல் முதன்மை ஸ்னாப்பர் உள்ளது. இது 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 2x ஆப்டிகல் ஜூம், 5 எக்ஸ் ஹைப்ரிட் ஜூம் மற்றும் 20 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றை அனுமதிக்கிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலுக்கு, எஃப் / 2.0 aperture உடன் 16 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.
இந்த போன் 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை என்எம் கார்டு வழியாக மேலும் விரிவாக்க முடியும். ஹானர் 30 எஸ், 40W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. மற்ற போன்களைப் போன்ற அதே அம்சங்கள் இதிலும் உள்ளன. அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இந்த போன் 162.31x75.0x8.58 மிமீ அளவு மற்றும் 190 கிராம் எடை கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்