64-மெகாபிக்சல் கேமராவுடன் அறிமுகமானது ஹானர் 30 எஸ்! 

ஹானர் 30 எஸ், கிரின் 820 5ஜி SoC பொருத்தப்பட்ட முதல் போனாகும்.

64-மெகாபிக்சல் கேமராவுடன் அறிமுகமானது ஹானர் 30 எஸ்! 

ஹானர் 30 எஸ், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • ஹானர் 30 எஸ், 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவுடன் வருகிறது
  • ஹானர் 30 எஸ் அடிப்படை 8ஜிபி+128ஜிபி மாடலுக்கு சிஎன்ஒய் 2,399 ஆகும்
  • ஹானர் 30 எஸ், 40W சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ள
விளம்பரம்

ஹானர் 30 சீரிஸின் முதல் போன் ஹானர் 30 எஸ் அறிமுகமாகியுள்ளது. ஹவாய் நிறுவனத்தின் புதிய கிரின் 820 5ஜி சிப்செட் பொருத்தப்பட்ட முதல் போன் இதுவாகும். குறிப்பாக, இந்த போன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. ஆனால், ஹவாய் மொபைல் சர்வீசஸ் (எச்எம்எஸ்) கோரை என்பதால், 'பிளே ஸ்டோர்' போன்ற கூகுள் சேவைகளுக்கு அணுகல் இல்லை.


ஹானர் 30 எஸ் விலை:

Honor 30S-ன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 2,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.25,500)-யாகவும், டாப்-எண்ட் 8 ஜிபி + 256 ஜிபி பதிப்பு சிஎன்ஒய் 2,699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,000)-யாகவும் உள்ளது. இந்த் போன் ஏப்ரல் 7 முதல் விற்பனைக்கு வரும். இந்த போன் கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை கலர் ஆப்ஷன்களில் வருகிறது. 

honor30s body Honor 30S

ஹானர் 30 எஸ், எஃப் / 2.0 aperture உடன் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.

ஹானர் 30 எஸ் விவரங்கள்: 

Honor 30 எஸ், டூயல்-சிம் (நானோ) ஸ்டாட்டைக் கொண்டுள்ளது. இந்த போன், மேஜிக் யுஐ 3.1.1 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இது 6.5 அங்குல முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டது. போனில் புதிய கிரின் 820 5ஜி சில்லு உள்ளது. இந்த போன் 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேமைக் கொண்டுள்ளது.

ஹானர் 30 எஸ்-ன் கேமரா அமைப்பில், எஃப் / 1.8 aperture உடன் 64 மெகாபிக்சல் முதன்மை ஸ்னாப்பர் உள்ளது. இது 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 2x ஆப்டிகல் ஜூம், 5 எக்ஸ் ஹைப்ரிட் ஜூம் மற்றும் 20 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றை அனுமதிக்கிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலுக்கு, எஃப் / 2.0 aperture உடன் 16 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.

இந்த போன் 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை என்எம் கார்டு வழியாக மேலும் விரிவாக்க முடியும்.  ஹானர் 30 எஸ், 40W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. மற்ற போன்களைப் போன்ற அதே அம்சங்கள் இதிலும் உள்ளன. அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இந்த போன் 162.31x75.0x8.58 மிமீ அளவு மற்றும் 190 கிராம் எடை கொண்டதாகும். 

  • KEY SPECS
  • NEWS
Display 6.50-inch
Processor HiSilicon Kirin 820
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »