கூகுள் ‘பிக்சல் 3a மற்றும் பிக்சல் 3a XL’ போன்களின் அட்டகாச சிறப்பம்சங்கள்!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 11 ஏப்ரல் 2019 19:39 IST
ஹைலைட்ஸ்
  • போன்களில், 3.5 எம்.எம் ஹெட்போன் ஜாக்கி இருப்பது தெரிகிறது.
  • போனுக்கு அடியில் ஸ்பீக்கர் இருக்க வாய்ப்புள்ளது
  • பிக்சல் 3a போன், 5.6 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கலாம்

ஐரீஸ் வண்ணத்தில் இந்த போன்கள் வரவும் வாய்ப்புகள் அதிகம். 

Photo Credit: Twitter / Sudhanshu Ambhore

மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது பிக்சல் 3a மற்றும் பிக்சல் 3a XL ஸ்மார்ட் போன்கள். நடுத்தர வகை ஸ்மார்ட் போன்களான இவை குறித்து தொடர்ந்து பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், கூகுள் ஸ்டோரில் லீக் ஆன சில படங்களை வைத்து, இந்த போன்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. பிக்சல் 3a மற்றும் பிக்சல் 3a XL போன்களுக்கான கேஸ் படங்கள்தான் தற்போது கசிந்துள்ளன. அதை வைத்துப் பார்க்கும்போது இந்த புதிய வகை கூகுள் போன்களில், 3.5 எம்.எம் ஹெட்போன் ஜாக்கி இருப்பது தெரிகிறது. 

இந்த லீக் படங்களில் இன்னொரு முக்கிய அம்சம் குறித்தும் அறிய முடிகிறது. இரண்டு போன்களில் முன் புறம் ஒரு கேமரா மட்டும்தான் இருக்கும் என்று நம்பலாம். 

பிக்சல் 3a போன், 5.6 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்பதை சமீபத்தில் வெளியான கூகுள் ப்ளே டெவலப்பர் கன்சோல் லிஸ்டிங்கை வைத்து சொல்ல முடிகிறது. 1080X2160 ரெசலுயூஷன் திறன் கொண்ட திரை, பிக்சல் 3a போனில் பொருத்தப்பட்டிருக்கும். கூடவே, 4ஜிபி ரேம் வசதி பெற்றிருக்கலாம். 

அதே நேரத்தில், பிக்சல் 3a XL-க்கு 6 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும். அது 1080X2220 துல்லியம் கொண்ட திரையைப் பெற்றிருக்கும். இந்த போன், ஸ்னாப்டிராகன் 670 எஸ்.ஓ.சி மூலம் பவரூட்டப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. 

லீக் ஆன படங்களில், பிக்சல் 3a கறுப்பு நிறத்திலும், பிக்சல் 3a XL வெள்ளை நிறத்திலும் இருக்கின்றன. ஐரீஸ் வண்ணத்தில் இந்த போன்கள் வரவும் வாய்ப்புகள் அதிகம். 


 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Google Pixel 3a, Google Pixel 3a XL, Google Pixel 3a XL Case Renders, Google
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சின்ன ஃபோன் பிரியர்களுக்கு Vivo-வின் சர்ப்ரைஸ்! Vivo S50 Pro Mini-இல் Dimensity 9400 சிப்செட்
  2. HMD-ன் அடுத்த மாடுலர் ஃபோன் ரெடி! கேமிங், வயர்லெஸ் சார்ஜிங் என ஒன்பது புது Smart Outfits! HMD Fusion 2 பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
  3. Nothing ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்! Nothing Phone 3a Lite இன்று மாலை அறிமுகம்! மலிவு விலையில் Glyph லைட் வருதா?
  4. iQOO ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்! iQOO 15 நவம்பரில் கன்ஃபார்ம்! மிரட்டலான அம்சங்கள் உள்ளே!
  5. OnePlus ரசிகர்களுக்கு ஜாக்பாட்! OnePlus 15, Ace 6 விலை லீக்! ரூ. 53,100 ஆரம்ப விலையில் 7300mAh பேட்டரி போனா?
  6. Vivo ரசிகர்களே! X300 சீரிஸ் இந்தியாவில் வருது! Zeiss கேமரா, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் டிசம்பரில் லான்ச்
  7. அடேங்கப்பா! Redmi K90 Pro Max-ல Bose ஆடியோவா? சும்மா தெறிக்குமே! | விலை & ஸ்பெக்ஸ்
  8. 108MP கேமரா, 7500mAh பேட்டரி: பட்ஜெட்ல ஒரு மாஸ் போன்! - Honor Magic 8 Lite லீக்ஸ்
  9. 2.07" AMOLED ஸ்கிரீன், 24 நாள் பேட்டரியா? - Redmi Watch 6 போட்டிருக்கும் மாஸ் பிளான்
  10. ஃபோன் ஸ்டோரேஜ் ஃபுல்லா இருக்கா? இனிமேல் WhatsApp-ல் இருந்தே ஈஸியா க்ளீன் பண்ணலாம்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.