Photo Credit: Twitter / Sudhanshu Ambhore
மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது பிக்சல் 3a மற்றும் பிக்சல் 3a XL ஸ்மார்ட் போன்கள். நடுத்தர வகை ஸ்மார்ட் போன்களான இவை குறித்து தொடர்ந்து பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், கூகுள் ஸ்டோரில் லீக் ஆன சில படங்களை வைத்து, இந்த போன்களில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது. பிக்சல் 3a மற்றும் பிக்சல் 3a XL போன்களுக்கான கேஸ் படங்கள்தான் தற்போது கசிந்துள்ளன. அதை வைத்துப் பார்க்கும்போது இந்த புதிய வகை கூகுள் போன்களில், 3.5 எம்.எம் ஹெட்போன் ஜாக்கி இருப்பது தெரிகிறது.
இந்த லீக் படங்களில் இன்னொரு முக்கிய அம்சம் குறித்தும் அறிய முடிகிறது. இரண்டு போன்களில் முன் புறம் ஒரு கேமரா மட்டும்தான் இருக்கும் என்று நம்பலாம்.
பிக்சல் 3a போன், 5.6 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்பதை சமீபத்தில் வெளியான கூகுள் ப்ளே டெவலப்பர் கன்சோல் லிஸ்டிங்கை வைத்து சொல்ல முடிகிறது. 1080X2160 ரெசலுயூஷன் திறன் கொண்ட திரை, பிக்சல் 3a போனில் பொருத்தப்பட்டிருக்கும். கூடவே, 4ஜிபி ரேம் வசதி பெற்றிருக்கலாம்.
அதே நேரத்தில், பிக்சல் 3a XL-க்கு 6 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும். அது 1080X2220 துல்லியம் கொண்ட திரையைப் பெற்றிருக்கும். இந்த போன், ஸ்னாப்டிராகன் 670 எஸ்.ஓ.சி மூலம் பவரூட்டப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
லீக் ஆன படங்களில், பிக்சல் 3a கறுப்பு நிறத்திலும், பிக்சல் 3a XL வெள்ளை நிறத்திலும் இருக்கின்றன. ஐரீஸ் வண்ணத்தில் இந்த போன்கள் வரவும் வாய்ப்புகள் அதிகம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்