Photo Credit: Twitter/ TechDroider
கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகின. இந்த போன் 5.81 இன்ச் முழு எச்டி + ஸ்கிரீன் மூலம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போனின் சில்லறை பெட்டியின் படமும் கசிந்துள்ளது. இது சதுர கேமரா தொகுதி மற்றும் கருப்பு கலர் ஆப்ஷனை காட்டுகிறது.
9to5Google-ன் அறிக்கையின்படி, வரவிருக்கும் Google Pixel 4a, 1,080x2,340 பிக்சல்கள் தெளிவுதிறனுடன் 5.8 இன்ச் டிஸ்பிளேவாக இருக்கும். பிக்சல் 4ஏ அட்ரினோ 618 ஜி.பீ.யுடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 730 SoC-யால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் பிக்சல் 4a 3,080mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இந்த போன் 64 ஜிபி + 6 ஜிபி மற்றும் 128 ஜிபி + 6 ஜிபி என இரு வேரியண்டுகளில் வரும். போனில், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் வழியாக 18w ஃபாஸ்ட் சார்ஜிங் இடம்பெறலாம்.
மேலும், பின்புறத்தில் உள்ள கேமராவில் Google பிக்சல் 4 போன்ற வீடியோ பதிவு திறன் கொண்ட 12.2 மெகாபிக்சல் சென்சார் இருக்கும். புதிய கசிவு, 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் மற்றும் 3.5 மிமீ headphone jack இருக்கும் என்று தெரிவிக்கிறது.
அடுத்ததாக, சில்லறை பெட்டியின் கசிந்த படம், எல்.ஈ.டி ஃபிளாஷ் மற்றும் ஒற்றை பின்புற கேமரா கொண்ட சதுர கேமரா தொகுதியை காட்டுகிறது. போனின் கருப்பு வேரியண்ட், கூகுளின் வெள்ளை பவர் பொத்தானைக் கொண்டிருக்கும். இந்த பெட்டி, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் அறிமுகத்தை குறிக்கக்கூடும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்