பிளிப்கார்ட்டின் குவால்காம் ஸ்னாப்டிராகன் நாட்கள் விற்பனையின் ஒரு பகுதியாக Google Pixel 3a XL, Vivo Z1 Pro, Vivo Z1x மற்றும் Asus 5z ஆகியவை தள்ளுபடியைப் பெற்றுள்ளன.
டிசம்பர் 31, செவ்வாய்க்கிழமை வரை தொடரும் ஐந்து நாள் பிளிப்கார்ட் விற்பனை, Asus Max M2, Lenovo K10 Note மற்றும் Black Shark 2 போன்ற போன்களிலும் தள்ளுபடியைக் கொண்டுவருகிறது. மேலும், Asus 6Z மற்றும் Mi A3 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் கூடுதல் எக்ஸ்சேஞ் தள்ளுபடிகள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் no-cost EMI ஆப்ஷன்களையும் வழங்குகிறது.
பிளிப்கார்ட் வழங்கிய பிரத்யேக மைக்ரோசைட்டின் (dedicated microsite) பட்டியலின் படி, குவால்காம் ஸ்னாப்டிராகன் நாட்கள் விற்பனை Google Pixel 3a XL-ஐ ரூ. 30.999-க்கு வழங்குகிறது. இது Vivo Z1x-ன் வெளியீட்டு விலையில் இருந்து குறைக்கப்பட்டு ரூ. 44.999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சமீபத்திய சில பிளிப்கார்ட் விற்பனையிலும் இதேபோன்ற விலை வீழ்ச்சியைக் கண்டோம்.
Pixel 3a XL தவிர, இந்த பிளிப்கார்ட் விற்பனையில் Vivo Z1 Pro-வை ஆரம்ப விலையில் இருந்து தள்ளுபடியாக ரூ. 12.990-யாக வழங்குகிறது. போனின் வழக்கமான விலை ரூ. 13.990 ஆகும். Vivo Z1x-ன் விலையும் ரூ. 16.990-யில் இருந்து குறைக்கப்பட்டு ரூ. 15,990-யாக உள்ளது.
பிளிப்கார்ட் விற்பனை Asus 5Z-ஐயும் ரூ. 16.999-யில் இருந்து குறைக்கப்பட்டு ரூ. 15,999-யாக விற்பனை செய்கிறது . இதேபோல், மிகவும் பிரபலமான மலிவு விலையுள்ள ஸ்மார்ட்போன்களில் ஒன்றான Asus Max M2-ன் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் பிளிப்கார்ட் விற்பனையிம் போது ரூ. 8.499-க்கு கிடைக்கும். இதன் அசல் விலைக் குறியீடு ரூ. 8,999 ஆகும்.
பிளிப்கார்ட் விற்பனையின் போது Lenovo K10 Note-ம் தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த போன் ரூ. 11.999-யில் இருந்து குறைக்கப்பட்டு, ரூ. 8,999-க்கு கிடைக்கிறது.
பிளிப்கார்ட், Black Shark 2-வை ரூ. 39,999-யில் இருந்து விலைக் குறைக்கப்பட்டு ரூ. 29.999-யாக விலைக் குறியீட்டுடன் விற்பனை செய்கிறது. வாடிக்கையாளர்கள், மாதத்திற்கு ரூ. 5,000 என்ற no-cost EMI ஆப்ஷனையும் பெறலாம்.
தற்போது நடைபெற்று வரும் பிளிப்கார்ட் விற்பனை Asus 6Z-ல் ரூ. 4,000 மதிப்புள்ள கூடுதல் எக்ஸ்சேஞ் தள்ளுபடியையும் வழங்குகிறது. Mi A3 வாங்கும் வாடிக்கையாளர்கள், கூடுதல் எக்ஸ்சேஞ் தள்ளுபடியாக ரூ. 1,000 பெறலாம். மேலும், Samsung Galaxy A70s-ல் ரூ. 2,500 மதிப்புள்ள கூடுதல் எக்ஸ்சேஞ் தள்ளுபடியும் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்