விவோ Z1x, ஆப்பிள் ஐபோன் 8, கூகுள் பிக்சல் 3a, மற்றும் சியோமி எம்ஐ மிக்ஸ் 2 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் ஜூன் 23 தொடங்க உள்ள ஃப்ளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது தள்ளுபடியில் கிடைக்கும் என தெரிகிறது. விவோ நெக்ஸ், ஐபோன் xs மற்றும் ஒப்போ A9 (2020) உள்ளிட்ட மாடல் போன்களுக்கும் தள்ளுபடி இருக்கும் என்று தெரிகிறது. மேலும், ஜூன் 27 வரை நீடிக்கும் இந்த நான்கு நாள் விற்பனையில் எச்.டி.எஃப்.சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியைக் கொடுக்கிறது. மோட்டோரோலா ரேஸ்ர் (2019) உள்ளிட்ட மொபைல்களுக்கு கட்டணமில்லாத ஈ.எம்.ஐ ஆப்ஷனும், கூடுதலாக எக்ஸ்சேஜ் தள்ளுபடியையும் ஃப்ளிப்கார்ட் வழங்க உள்ளது.
ஃப்ளிப்கார்ட் அதன் பிக் சேவிங் டேஸ் விற்பனைக்கு முன்னதாக மைக்ரோசைட் மூலம் முக்கிய டீல்களை முன்னோட்டமிட்டுள்ளது. இந்த விற்பனையின் போது, ரூ.16,990க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த விவோ z1x ரூ.14,990க்கும், ரூ.36,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஐபோன் 7 பிளஸ் 32 ஜிபி மாடல் ரூ.34,999க்கும் விற்பனைக்கு வர உள்ளது.
கூகிள் பிக்சல் 3A ரூ.37,999 சிரீஸானது ரூ.29,999ல் இருந்து தொடங்குகிறது. இது ரூ.30,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.1,000 விலைக்குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஒப்போ A9 (2020) 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.15,990லிருந்து, ரூ.12,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. எம்ஐ மிக்ஸ் 2 ரூ.19,999க்கு விற்பனை செய்யப்பட வேண்டியது, ரூ.5,000 குறைக்கப்பட்டு, மறுபுறம் ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையில், ரூ.29,990க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய விவோ நெக்ஸ் ரூ.23,990க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
ஐபோன் 8 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் தற்போதுள்ள ரூ.38,999க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ரூ.36,999க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கு விலை இல்லாத இ.எம்.ஐ ஆப்ஷன்களும் மாதம் ரூ.6,167ல் கிடைக்கும். ஐபோன் 7 32 ஜிபி வேரியண்ட் ரூ.28,499க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது, ரூ.29,499க்கு கிடைக்கும். மேலும், ஃப்ளிப்கார்ட் விற்பனையில் ஐபோன் xs 64ஜிபி மாடல் ரூ.62,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது ரூ.58,999 கிடைக்கிறது. இந்த விற்பனையின் போது மோட்டோரோலா ரேஸ்ர் (2019) ரூ.25,000 மற்றும் கட்டணமில்லாத மாதம் ரூ.5,209 EMI ஆப்ஷனில் கிடைக்கிறது.
ஃப்ளிப்கார்ட் இதுவரை முக்கிய ஒப்பந்தங்களை மட்டுமே முன்னோட்டமிட்டுள்ளது. இதன் பொருள் அடுத்த வாரம் விற்பனையின் போது பல மொபைல்கள் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளைப் பெற வாய்ப்புள்ளது. எச்.டி.எஃப்.சி வங்கி கார்டு மற்றும் ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துவதில் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும்
Is OnePlus 8 Pro the perfect premium phone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்