Flipkart மற்றும் Amazon விற்பனை: சிறந்த மொபைல்போன் சலுகைகள் இதோ!

பிளிப்கார்ட்டில் நடைபெறும் தள்ளுபடி மொபைல்போன் விற்பனை ஆகஸ்ட் 31 நள்ளிரவு வரை நடைபெறவுள்ள நிலையில், அமேசானின் விற்பனை ஆகஸ்ட் 30 அன்றே முடிவடைகிறது.

Flipkart மற்றும் Amazon விற்பனை: சிறந்த மொபைல்போன் சலுகைகள் இதோ!

Flipkart மற்றும் Amazon என இரண்டு நிறுவனங்களும், ஆகஸ்ட் மாதத்திற்கான மாத இறுதி மொபைல் விற்பனையை இந்த வாரத்தில் நடத்தி வருகிறது.

ஹைலைட்ஸ்
  • Flipkart மற்றும் Amazon மாத கடைசி விற்பனை இந்த வாரத்தில் நடைபெறுகிறது
  • பிளிப்கார்ட்டில் நடைபெறும் தள்ளுபடி விற்பனை ஆகஸ்ட் 31 வரை நடைபெறும்
  • அமேசானின் விற்பனை ஆகஸ்ட் 30 அன்றே முடிவடைகிறது.
விளம்பரம்

Flipkart மற்றும் Amazon என இரண்டு நிறுவனங்களும், ஆகஸ்ட் மாதத்திற்கான மாத இறுதி மொபைல் விற்பனையை இந்த வாரத்தில் நடத்தி வருகிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் சார்பில் Month-End Mobiles Fest விற்பனையும், அமேசான் நிறுவனத்தின் சார்பில் Fab Phones Fest விற்பனையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விற்பனைகளில் இந்த இரண்டு நிறுவனங்களும் சந்தையில் பிரபலமாக உள்ள பல ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்கவுள்ளது. பிளிப்கார்ட்டில் நடைபெறும் தள்ளுபடி மொபைல்போன் விற்பனை ஆகஸ்ட் 31 நள்ளிரவு வரை நடைபெறவுள்ள நிலையில், அமேசானின் விற்பனை ஆகஸ்ட் 30 அன்றே முடிவடைகிறது. இந்த இரண்டு விற்பனைகளிலும் இடம்பெற்றுள்ள சில சிறந்த சலுகைகள் இதோ!

Flipkart மற்றும் Amazon விற்பனை: சிறந்த சலுகையை பெறும் மொபைல்போன்கள்!

சாம்சங் கேலக்சி M30 (Samsung Galaxy M30)

அமேசானின் இந்த விற்பனையில் Samsung Galaxy M30 (4GB + 64GB) ஸ்மார்ட்போன் 1000 ரூபாய் விலை குறைக்கப்பட்டு 13,990 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. அதே நேரம் Samsung Galaxy M20 ஸ்மார்ட்போனின் 3GB RAM + 32GB வகை, 9,990 ரூபாய் என்ற விலையிலும், 4GB RAM + 64GB வகை 11,990 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது. Samsung Galaxy M30 ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமரா, வாட்டர்-ட்ராப் நாட்ச் திரை, சாம்சங் எக்சினோஸ் 7904 SoC ப்ராசஸர் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

ஹானர் ப்ளே (Honor Play)

4GB RAM, 64GB சேமிப்பு Honor Play ஸ்மார்ட்போனின் விலை 11,999 ரூபாயாக அமேசானின் இந்த விற்பனையில் விலை குறைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்சேஞ்ச் முறையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு 9,500 ரூபாய் வரை தள்ளுபடியை பெற்றுக்கொள்ளலாம். Honor Play ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் திரை, கிரின் 970 SoC ப்ராசஸர் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. 

விவோ Z1 Pro (Vivo Z1 Pro)

ஆன்லைனில் பணம் செலுத்தி Vivo Z1 Pro ஸ்மார்ட்போனை பெற்றால், 1,000 ரூபாய் தள்ளுபடியை வழங்கவுள்ளது பிளிப்கார்ட் நிறுவனம். அதன்படி இந்த ஸ்மார்ட்போனை 13,990 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கு எக்ஸ்சேஞ்ச் முறையில் 13,500 ரூபாய் வரை உடனடி தள்ளுபடியை வழங்கவுள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.

ரெட்மி Y3 (Redmi Y3)

அமேசானின் 'Amazon Fab Phones Fest' விற்பனையில் இந்த Redmi Y3 ஸ்மார்ட்போனின் 3GB, 32GB வகை, 8,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு பின்புற கேமரா, 32 மெகாபிக்சல் செல்பி கேமரா, ஸ்னேப்டிராகன் 632 SoC ப்ராசஸர், 4,000mAh பேட்டரி ஆகிய சிறப்பம்ங்களை கொண்டுள்ளது. 

ரெட்மி 6 (Redmi 6) (3GB, 64GB)

ரெட்மி 6 தொடர் ஸ்மார்ட்போன்களும் இந்த தள்ளுபடி விற்பனையில் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில்  Redmi 6 (3GB+64GB) ஸ்மார்ட்போன் 6,999 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது. Redmi 6A (2GB+16GB) ஸ்மார்ட்போன் 6,199 ரூபாய் விலையிலும், Redmi 6 Pro (4GB+64GB) ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது. 

சியோமி 'Mi A2' (Xiaomi 'Mi A2')

Xiaomi Mi A2 4GB RAM + 64GB சேமிப்பு வகை 2,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டு 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. மறுமுனையில், 6GB RAM + 128GB சேமிப்பு வகை Mi A2 ஸ்மார்ட்போன், 3,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டு 12,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. 200MP கேமரா.. 7,000mAh பேட்டரி! கிறிஸ்துமஸ் அன்னைக்கு லான்ச் ஆகுது Xiaomi 17 Ultra
  2. ஆப்பிள் மினிக்கு போட்டியாக 'ஒப்போ மினி'! 4 மாடல்களில் மிரட்ட வரும் Reno 15 சீரிஸ்! 7000mAh பேட்டரியா?
  3. இனி ஃபோல்டபிள் போன்லயும் தத்ரூபமான போட்டோஸ்! சாம்சங் Z Fold 8-ன் மிரட்டலான கேமரா சிறப்பம்சங்கள் கசிந்தது
  4. ஆப்பிள், குவால்காமுக்கு செம டஃப்! சாம்சங்கின் 2nm எக்ஸினோஸ் 2600 வந்தாச்சு
  5. 8.9mm தடிமன்.. 10 நாள் பேட்டரி! ஒன்பிளஸ் வாட்ச் லைட் (OnePlus Watch Lite) லான்ச் ஆகிடுச்சு
  6. 200MP கேமரா.. ஆனா சைஸ் ரொம்ப சின்னது! OPPO Reno15 Pro Mini - இதோட டிசைனை பார்த்தா அசந்துடுவீங்க
  7. வந்துவிட்டது புது Oppo Pad Air 5: 2.8K Display, 10,050mAh Battery & 5G Support
  8. அமேசான் பே-வில் அதிரடி! ₹5,000 வரை பேமெண்ட் பண்ண இனி பின் நம்பர் போட வேணாம்
  9. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. ரியல்மி 16 ப்ரோ+ (Realme 16 Pro+) ரகசியங்கள் அம்பலம்
  10. இனி ஆப் ஸ்டோர்ல எதை தேடினாலும் விளம்பரமா தான் இருக்கும்! ஆப்பிள் எடுத்த அதிரடி முடிவு! கடுப்பில் யூசர்கள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »