ரெட்மி நோட் 7 ப்ரோ விலை லீக் ஆனது… பரபர தகவல்கள்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 25 ஜனவரி 2019 17:02 IST
ஹைலைட்ஸ்
  • நோட் 7 ப்ரோ விலை, சுமார் ரூ.15,800 இருக்க வாய்ப்புள்ளது
  • அடுத்த மாதம் இந்த போன் வெளியாகும்
  • சீன சந்தைகளில் இந்த போன் வெளியாகியுள்ளது

இன்னும் உலக சந்தைகளில் வெளிவராத இந்த போன், ரெட்மி நோட் 7-ன் அப்டேட் வெர்ஷன் என்று சொல்லப்படுகிறது

Photo Credit: Weibo/ Xiaomi

ஸ்மார்ட் செல்போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ரெட்மி நிறுவனத்தின், மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ரெட்மி நோட் 7 ப்ரோ' குறித்தான பரபரப்பான தகவல்கள் லீக் ஆகியுள்ளன. 

கடந்த வாரம் இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்னும் உலக சந்தைகளில் வெளிவராத இந்த போன், ரெட்மி நோட் 7-ன் அப்டேட் வெர்ஷன் என்று சொல்லப்படுகிறது. சியோமீ நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘ரெட்மி பை சியோமீ' நிறுவனம் நோட் 7 ப்ரோ போனை வெளியிட உள்ளது. அடுத்த மாதம் இந்த போன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். ஸ்னாப்டிராகன் 675 எஸ்.ஓ.சி ப்ராசஸருடன் இந்த போன் வடிவமைக்கப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், நோட் 7 போலவே, நோட் 7 ப்ரோ போனுக்கும் 48 மெகா பிக்சல் கொண்ட பின்புற கேமரா இருக்கும். 

வீய்போ (Weibo) தளத்தில் சியோமீ நிறுவனம், ரெட்மி நோட் 7 குறித்தான ஒரு டீசரை வெளியிட்டு பரபரப்பைக் கூட்டியது. அந்த டீசரில்தான் சீனப் புத்தாண்டையொட்டி நோட் 7 ப்ரோ செல்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரியப்படுத்தப்பட்டது. 

அந்த டீசரில் கூடுதலாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில், ஸ்னாப்டிராகன் 675 எஸ்.ஓ.சி ப்ராசஸருடன் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்திடமிருந்து தகவல் வந்துள்ளது. நோட் 7 போனில், ஸ்னாப்டிராகன் 660 எஸ்.ஓ.சி ப்ராசஸர் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

ரெட்மி நோட் 7 ப்ரோ விலை (எதிர்பார்க்கும் விலை)

நோட் 7 ப்ரோ, சுமார் 15,800 ரூபாய் பக்கம் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக ரெட்மி நோட் 7, 3 ஜிபி/ 32 ஜிபி சேமிப்பு வசதி போன் 10500 ரூபாய்க்கும், 4 ஜிபி/ 64 ஜிபி சேமிப்பு வசதி போன் 12,600 ரூபாய்க்கும், 6 ஜிபி/ 64 ஜிபி சேமிப்பு வசதி போன் 14,700 ரூபாய்க்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi Note 7 Pro, Redmi Note 7, Xiaomi, Redmi, Snapdragon 675
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Snapdragon 8 Elite Gen 5 சில்லுடனான முதல் போன்! OnePlus 15 Flagship-ன் ஸ்பெஷல் அம்சங்கள் இதோ
  2. 7000mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே! Motorola-வின் புதிய கிங் Moto G67 Power 5G - இந்தியாவுக்கு வருது!
  3. சத்தம் போட்டாலும் காது கேட்காது! 55dB ANC உடன் Oppo Enco X3s TWS Earphones அறிமுகம்
  4. Nothing Phone 3a Lite: Glyph Light, Dimensity 7300 Pro, 50MP Camera – முழு விவரம்
  5. ₹6,000 பட்ஜெட்டில் 4K Streaming! Amazon Fire TV Stick 4K Select - புதிய Vega OS, Alexa Voice Remote அம்சங்களுடன்!
  6. OPPO Find X9, Dimensity 9500 உடன் கூடிய Find X9 Pro அறிவிக்கப்பட்டது: விலை, விவரக்குறிப்புகள்
  7. Realme C85 Pro Geekbench Listing! 7000mAh பேட்டரி, Snapdragon 685: விலை செக் பண்ணுங்க!
  8. S26 சீரிஸ்ல Samsung-ன் மாஸ்டர் பிளான்! Bluetooth 6.1 சப்போர்ட்டுடன் Exynos S6568 சிப்!
  9. iQOO Neo 11 வருகிறான்! 7500mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே-னு வெறித்தனம் அக்டோபர் 30 லான்ச்
  10. Redmi Turbo 5-ன் புதிய லீக்! 1.5K டிஸ்பிளே, IP68 ரேட்டிங்: Poco X8 Pro-வா இந்தியாவுக்கு வரும்?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.