Photo Credit: Weibo/ Xiaomi
இன்னும் உலக சந்தைகளில் வெளிவராத இந்த போன், ரெட்மி நோட் 7-ன் அப்டேட் வெர்ஷன் என்று சொல்லப்படுகிறது
ஸ்மார்ட் செல்போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ரெட்மி நிறுவனத்தின், மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ரெட்மி நோட் 7 ப்ரோ' குறித்தான பரபரப்பான தகவல்கள் லீக் ஆகியுள்ளன.
கடந்த வாரம் இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்னும் உலக சந்தைகளில் வெளிவராத இந்த போன், ரெட்மி நோட் 7-ன் அப்டேட் வெர்ஷன் என்று சொல்லப்படுகிறது. சியோமீ நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘ரெட்மி பை சியோமீ' நிறுவனம் நோட் 7 ப்ரோ போனை வெளியிட உள்ளது. அடுத்த மாதம் இந்த போன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். ஸ்னாப்டிராகன் 675 எஸ்.ஓ.சி ப்ராசஸருடன் இந்த போன் வடிவமைக்கப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், நோட் 7 போலவே, நோட் 7 ப்ரோ போனுக்கும் 48 மெகா பிக்சல் கொண்ட பின்புற கேமரா இருக்கும்.
வீய்போ (Weibo) தளத்தில் சியோமீ நிறுவனம், ரெட்மி நோட் 7 குறித்தான ஒரு டீசரை வெளியிட்டு பரபரப்பைக் கூட்டியது. அந்த டீசரில்தான் சீனப் புத்தாண்டையொட்டி நோட் 7 ப்ரோ செல்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரியப்படுத்தப்பட்டது.
அந்த டீசரில் கூடுதலாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில், ஸ்னாப்டிராகன் 675 எஸ்.ஓ.சி ப்ராசஸருடன் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்திடமிருந்து தகவல் வந்துள்ளது. நோட் 7 போனில், ஸ்னாப்டிராகன் 660 எஸ்.ஓ.சி ப்ராசஸர் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி நோட் 7 ப்ரோ விலை (எதிர்பார்க்கும் விலை)
நோட் 7 ப்ரோ, சுமார் 15,800 ரூபாய் பக்கம் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக ரெட்மி நோட் 7, 3 ஜிபி/ 32 ஜிபி சேமிப்பு வசதி போன் 10500 ரூபாய்க்கும், 4 ஜிபி/ 64 ஜிபி சேமிப்பு வசதி போன் 12,600 ரூபாய்க்கும், 6 ஜிபி/ 64 ஜிபி சேமிப்பு வசதி போன் 14,700 ரூபாய்க்கும் அறிமுகப்படுத்தப்பட்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்