ஆன்லையின் மற்றும் ஆஃவ்லையின் என இரண்டிலும் வெளியாகும் கூல்பேட் கூல்3!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது மூன்று பிரமாண்டமான ஸ்மார்ட்போன்களான (மெகா 5, மெகா 5 எம் மற்றும் மெகா 5 சி) ஆகியவற்றை அறிமுகப் படுத்திய நிலையில் கூல்பேட் நிறுவனம் இந்திய சந்தைகளில் தனது ஆதிக்கத்தை தொடரும் வகையில் கூல்பேட் கூல் 3 என்னும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொருத்தவரை வாட்டர் டிராப் நாட்ச் ஸ்டைலில் டிஸ்பிளே மற்றும் இரண்டு பின்புற கேமராக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போனில் கைவிரல் ரேகை வைக்கும் சென்சார் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டிராய்டு 9 பைய்யின் மென்பொருள் மூலம் இந்த போன் இயங்கவுள்ள நிலையில் 3,000mAh பேட்டரி பவர் மற்றும் 5.71 இஞ்ச் அளவு டிஸ்பிளே கொண்டது.
கூல்பேட் நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான கூல்பேட் மெகா 5 6,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த புதிய கூல்பேட் கூல் 3 வகை ஸ்மார்ட் போன் 5,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஆன்லையின் மற்றும் கடைகளில் கிடைக்கும் என்ற அறிவிப்பை தொடர்ந்து சரியான வெளியாகும் தேதி இன்னும் அறியப்படவில்லை.
மேலும் நிறங்களை பொருத்தவரை மீட்நையிட் புளூ, ரூபி பிளாக், ஓசியன் இன்டிகோ மற்றும் டிரில் கீரிண் ஆகிய நிறங்களில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.'ஃவேஸ் அன்லாக்' தொழில்நுட்பத்தை கொண்டு கூல்பேட் கூல் 3, 1.3GHz ஆக்டா கோர் பிராசஸ்சரை கொண்டு செயல்படுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி நினைவகத்தையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்