இதில் உள்ள டேப் டச் அல்லது ஷட்டர் மூலம் அதிகப்பட்சம் 10 மொமெண்டுகள், ஆக்ஷன்களைப் பதிவு செய்லயாம். இவற்றில் 7 படங்களாகவும், 3 வீடியோக்களாகவும் கேலரியில் பதிவாகின்றன.
சாம்சங் கேலக்ஸி A51 (இடது) மற்றும் சாம்சங் கேலக்ஸி A71 (வலது)
நீங்கள் பேன்சியாக, வேடிக்கையாக வீடியோ, போட்டோ எடுக்க விருப்பமா? அப்படியேன்றால் உங்களுக்காகவே வந்துவிட்டது கேலக்ஸி A51, A71 ஸ்மார்ட்போன். குறைந்த விலையில் ஒரு கச்சிதமான ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்.
சாம்சங் நிறுவனத்தின் A சீரிஸில் புத்தம் புதிய ஸ்மார்ட்போன் A51, A71 ஆகும். இதற்கு முன்பு வெளிவந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும், இதில் கேமரா முதல் பிராசசர் வரையில் அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பாக விலைக்குத் தகுந்தாற் போல் ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட்போன் என்று கூறினால் மிகையாகாது.
சூப்பர் டூப்பரான போட்டோக்களை எடுப்பதற்கும், வீடியோக்களை எடுப்பதற்கும் இது ஒரு சிறந்த தேர்வாகும். அந்த வகையில் இதிலுள்ள சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களைக்கு குறித்து இங்குக் காணலாம்.
சாம்சங்கின் A51, A71 ஸ்மார்ட்போன்களில் விதவிதமான மோடுகளில் போட்டோ, வீடியோக்களை எடுக்க முடியும். இந்த மோடுகளில் எந்த மோடை தேர்வு செய்யலாம் என்பது உங்களுக்கே குழப்பமாக இருக்கும். அந்த அளவுக்கு எண்ணற்ற வசதிகள் உள்ளன. குறிப்பாக ஒரே கிளிக்கில் எல்லா மொமெண்டுகளையும் படம் பிடிக்க முடியும். அவற்றில் உங்களுக்கு சிறந்த மொமெண்டுகளை மட்டும் நீங்கள் தனியாக தேர்வு செய்து கொள்ளலாம்.
![]()
ஒரே கிளிக்கில் அனைத்து ஷார்டுகளையும் படம் பிடிக்கும் சாம்சங் கேலக்ஸி A51, A71 ஸ்மார்ட்போன்
இதில் உள்ள டேப் டச் அல்லது ஷட்டர் மூலம் அதிகப்பட்சம் 10 மொமெண்டுகள், ஆக்ஷன்களைப் பதிவு செய்லயாம். இவற்றில் 7 படங்களாகவும், 3 வீடியோக்களாகவும் கேலரியில் பதிவாகின்றன. எனவே, போட்டோ, வீடியோ எடுப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
உதாரணத்திற்கு ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தை நீங்கள் போட்டோ எடுக்கிறீர்கள் என்றால், ஒரே க்ளிக்கில் போட்டோ எடுத்தால் போதும். அதில் கேக் வெட்டுவது முதல் அலங்கார வெடி வெடிப்பது வரை அனைத்தும் பதிவாகிவிடும். அவற்றில் சிறந்த ஷார்டுகளை மட்டும் மெருகேற்றலாம். மற்றவர்களுக்கும் உடனடியாக ஷேர் செய்யலாம்.
அட்டகாசமான நைட் மோடு:
இதே போல் சாம்சங் A71, A51 ஸ்மார்ட்போன்களில் நைட் மோடும் பிரம்மாதமாக இருக்கிறது. லோ லைட் நிலைமகைளில், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள 'நைட் ஹைப்பர்லாப்ஸ்' அம்சத்தைப் பயன்படுத்தி போட்டோக்களை எடுக்கலாம். இதன் மூலம் இரவு நேர சூழல்களை இனிமையாக படம் பிடிக்கலாம்..
![]()
நைட் ஹைப்பர்லேப்ஸ் மோடில் எடுக்கப்பட்ட புகைப்படம்
விதவிதமான ஃபில்டர்கள்:
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் என பலவற்றிலும் புகைப்படங்களை ஷேர் செய்ய விரும்புகிறவர்கள், சாம்சங்கின் இந்த A51, A71 ஸ்மார்ட்போன் கச்சிதமாக பொருத்தமாக இருக்கும்..
![]()
Custom filters help you add that personal touch to your photos
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
SBI YONO 2.0 Launch: State Bank of India Reportedly Targets 20 Crore Users, Plans to Hire 6,500 Staff