சீனாவில் ஆப்பிள் உள்ளிட்ட பிராண்டட் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பொருட்களின் விலையை சற்று குறைத்திருக்கின்றன. சீனாவில் வாட் வரி குறைப்பு நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து ஆப்பிள் உள்ளிட்ட போன்களின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பான விவரங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த விலைக்குறைப்பு நேற்றில் இருந்து நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதன்படி 500 யென் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 5 ஆயிரம் ரூபாய் அளவுக்கு விலை குறைந்துள்ளது.
இதேபோன்று சீனாவில் நன்றாக விற்பனையாகி வரும் லூயிஸ் விட்டோன், கெரிங் கக்கி உள்ளிட்ட பிராண்டடுகளின் உற்பத்தி பொருட்களின் விலையும் 3 சதவீதம் வரை குறைவாகி உள்ளது.
சீனாவில் வாட் வரி விதிப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதையடுத்து பி.எம். டபிள்யூ, மெர்சிடிஸி பென்ஸ் உள்ளிட்ட கார்களின் விலை கடந்த மாதம் குறைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் விலை மாற்றத்தை செய்துள்ளன.
ஆப்பிள் போனின் விலை குறிப்பு குறித்து அதன் தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. பொருளாதாரத்தை பொருத்தளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா கொடிகட்டி பறந்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்