இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன், எல்.இ.டி டிவி ஸ்பிக்கர்ஸ் மற்றும் பல வீட்டு உபயோகப் பொருட்களையும் மின் சாதனங்களையும் வாங்கலாம். இதில் எஸ்பிஐ கார்டை பயன்படுத்துபவர்களுக்கு 10 சதவீதம் உடனடி சலுகை வழங்கப்படுகிறது
அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கியது.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனையை தொடங்கி 12 மணி நேரம் கழித்து, தற்போது அனைவரும் கிரேட் இந்தியன் சேலில் பொருட்களை வாங்கலாம். இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன், எல்.இ.டி டிவி ஸ்பிக்கர்ஸ் மற்றும் பல வீட்டு உபயோகப் பொருட்களையும் மின் சாதனங்களையும் வாங்கலாம். இதில் எஸ்பிஐ கார்டை பயன்படுத்துபவர்களுக்கு 10 சதவீதம் உடனடி சலுகை வழங்கப்படுகிறது. மேலும், இன்றும் 6,000க்கு மேல் பொருட்களை வாங்கும் அனைவருக்கும் 10 சதவீதம் எக்ஸ்ட்ரா கேஷ்பேக் தரப்படுகிறது. மேலும் இந்த வருடம் குறிப்பிட்ட வாடிக்கையாளரை தேர்ந்தெடுத்து ரூ.60,000 மதிப்பிலான தொகையை கிரெடிட் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளது.
போஸ் கொயட் கம்போர்ட் 35 II வயர்லெஸ் ஹெட்போனின் விலை தற்போது ரூ.23,489 ஆக குறைந்துள்ளது. இதன் சிறப்பம்சமாக வெளிப்புறச் சத்தம் இல்லாமல் செய்துவிடும். மேலும், புளூடூத் மற்றும் என்எப்சி இவற்றை பயன்படுத்தி பிற சாதனங்களுடன் இணைத்து விட முடியும்.
அசூஸ் டி.யூ.எப். 15.6 இன்ச் லேப்டாப் விலை ரூ.59,990 பழைய லேப்டாப்பை எக்ஸ்சேஞ்ச் முறையில் கொடுத்து ரூ.15,510 கேஷ்பேக்கை பெறலாம். அசூஸ் டி.யூ.எப் 15.6 இன்ச் கேமிங் லேப்டாப்பில் 8th ஜெனரேஷன் இண்டல் கோர் பராஸசர் மற்றும் 8 ஜிபி ரேம் உள்ளது. இதில், நிவிடியா ஜிடிஎக்ஸ் 1050 கிராபிக்ஸ் கார்ட் 4ஜிபி வீடியோ ராமால் சப்போர்ட் செய்யப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் எக்ஸ் இப்போதும் ரூ.67,999க்கு அமேசான் சேலில் கிடைக்கிறது. இதே விலையில், ஐபோன் எக்ஸ்.எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ் கிடைக்கிறது. தி கிரேட் இன்டியன் ஃபெஸ்டிவல் சேலில் ஒருமுறை இலவசமாக ஸ்கிரின் மாற்றித்தரப்படும்.
ஏசர் நிட்ரோ 15.6 இன்ச் கேமிங் லேப்டாப்பின் விலை ரூ.64,990 ஆக குறைந்துள்ளது. அதுவும் அமேசான் கிரேட் இண்டியன் சேலில் குறுகிய காலத்திற்கு மட்டுமே. 8th ஜெனரேஷன் இன்டல் கோர் ஐ7 ப்ராஸசர் 8ஜிபி ரேம் சப்போர்ட் கொண்டுள்ளது. மேலும் ஏசர் நிறுவனத்தின் சார்பாக ஒருவருடம் வாரண்டி கொடுக்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
WhatsApp for iOS Finally Begins Testing Multi-Account Support With Seamless Switching