அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2019 விற்பனை நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பமானது. e-retailer's-ன் பிரைம் விற்பனையாளர்களுக்கு 12 மணி நேரத்திற்கு பிறகே அணுகமுடியும். அமேசானில் தீபாவளி சிறப்பு விற்பனை அக்டோபர் 17 நள்ளிரவு வரை அனைவருக்கும் திறந்திருக்கும்.
மொபைல்போன் சலுகைகள்:
Vivo U10
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Vivo U10, அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2019 விற்பனையின் போது அனைத்து ப்ரீபெய்ட் ஆர்டர்களிலும் 1,000 ரூபாய் தள்ளுபடி விற்பனையில் கிடைக்கும். Vivo U10, 18W fast-charging ஆதரவுடன் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. இது Snapdragon 665 chipset-ஆல் இயக்கப்படுகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றுவதன் மூலம் 7,650 ரூபாய் வரை கூடுதல் எக்ஸ்சேஞ் தள்ளுபடியை பெறலாம்.
விலை: ரூ. 8,990 (MRP ரூ. 10,990)
Apple iPhone XR
ஆப்பிளின் பிரபலமான iPhone XR அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. iPhone XR-ன் 64 ஜிபி ஸ்டோராஜின் விலை (MRP ரூ .49,900)-திலிருந்து ரூ. 42,999-க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி 10 சதவிகித உடனடி தள்ளுபடியைப் பெற நீங்கள் பணம் செலுத்தினால் சிறந்த ஒப்பந்தங்களை பெறலாம்.
விலை: ரூ. 42,999 (MRP ரூ. 49,900)
OnePlus 7
OnePlus 7, (8 ஜிபி, 256 ஜிபி) ஸ்டோரேஜின் விலை (MRP ரூ. 37,999)-திலிருந்து, தற்போது நடந்துகொண்டிருக்கும் அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2019 விற்பனையின் போது 34,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டல் எக்ஸ்சேஞ் ஆஃபருக்கு ரூ. 13,000 வரை அமேசான் வழங்குகிறது.10 சதவிகித ஐசிஐசிஐ வங்கி அட்டைகளின் தள்ளுபடியைச் சேரப்பதன் மூலம் நல்ல ஒப்பந்தத்தைப் பெற முடியும்.
விலை: ரூ. 34,999 (MRP ரூ. 37,999)
டிவி சலுகைகள்:
TCL 50-inch 4K smart Android TV
இப்போது சந்தையில் ஏராளமான பட்ஜெட் ஸ்மார்ட் டிவிகள் உள்ளன. இவற்றில் TCL 50-inch 4K smart TV-யின் விலை ரூ. (MRP ரூ. 64,990)-திலிருந்து,அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது 25,999 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இது அலெக்சா ஒருங்கிணைப்புடன் வரும் சான்றளிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு டிவியின் (ஆண்ட்ராய்டு 9.0)-ன் 2019 மாடலாகும். டிவியில் மூன்று HDMI ports மற்றும் இரண்டு USB ports உள்ளன. இது 18 மாத நிலையான உத்தரவாதத்துடன் வருகிறது.
விலை: ரூ. 25,999 (MRP ரூ. 64,990)
VU 49-inch full-HD smart LED TV
VU 49-inch full-HD smart LED TV-யின் விலை (MRP ரூ. 36,000)-திலிருந்து, தற்போது 26,990 ரூபாய்க்கு அமேசானில் கிடைக்கிறது. டிவியில் A+ grade IPS panel உள்ளது. இது 1920x1080 native resolution-ஐ ஆதரிக்கிறது. இது மூன்று HDMI ports மற்றும் இரண்டு USB port-களுடன் வருகிறது. டிவியில் VU-விலிருந்து 1 ஆண்டு நிலையான உத்தரவாதத்துடன் வருகிறது.
விலை: ரூ. 26,990 (MRP ரூ. 36,000)
சலுகை விலையில் அமேசான் சாதனங்கள்:
Fire TV Stick
விலை: ரூ. 2,799 (MRP ரூ. 3,999)
நல்ல பழைய Fire TV Stick அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது தள்ளுபடியுடன் திரும்பியுள்ளது. அதன் விலை (MRP ரூ. 3,999)-திலிருந்து தற்போது ரூ. 2,799-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஃபயர் டிவி ஸ்டிக் உங்கள் old-school dumb LED அல்லது LCD TV-யை மேம்படுத்துவதற்கான சரியான வழியாகும். ஸ்மார்ட் அல்லாத டிவிகளில் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்வதற்கான எளிதான வழிகளில் இதுவும் ஒன்று. உங்களிடம் 4K TV இருந்தால், Fire TV Stick 4K-வை (MRP ரூ .5,999)-திலிருந்து தள்ளுபடி விலையில் 3,999 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ளுங்கள்.
Amazon Echo (second generation)
Amazon Echo (second generation) ஸ்மார்ட் ஸ்பீக்கரின் விலை (MRP ரூ .9,999)-திலிருந்து தற்போது ரூ. 5,999-க்கு கிடைக்கிறது. ஸ்பீக்கர் பொதுவாக சுமார் 7,999 ரூபாய்க்கு ஆன்லைன் சில்லறை விற்பனையாளருக்கு கிடைக்கிறது. Amazon Echo அலெக்சா என்ற நிறுவனத்தின் virtual assistant-ஆல் இயக்கப்படுகிறது. நீங்கள் இசையைக் கேட்கலாம், ஸ்மார்ட் வீட்டு உபகரணங்களைக் கட்டுப்படுத்தலாம், கேள்விகளைக் கேட்கலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம்.
விலை: ரூ. 5,999 (MRP ரூ. 9,999)
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்